Advertisement

மார்ச் 29ல் ‛பொன்னியின் செல்வன் 2' டிரைலர் ரிலீஸ்

கல்கி எழுதிய சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் அதேபெயரில் படமாகி கடந்தாண்டு முதல்பாகம் வெளியானது. மணிரத்னம் இயக்கிய இந்தப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், லால், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்தனர். 500 கோடிக்கும் மேலான வசூலை பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்., 28ல் ரிலீஸாக உள்ளது. தற்போது படம் பற்றிய ஒவ்வொரு அப்டேட்டுகள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. கடந்தவாரம் முதல்பாடலாக அக நக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்தப்படியாக படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

அதன்படி டிரைலர் வரும் மார்ச் 29ல் வெளியாக உள்ளது. இதுதொடர்பாக விக்ரம், ஐஸ்வர்யா ராயை தொடர்புபடுத்தி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் வெளியிட உள்ளனர். முதல்பாகத்தை விட இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அதை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் இசை உள்ளிட்ட ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து கவனித்து வருகின்றனர்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement