Advertisement

32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சத்யராஜ் - ஷோபனா

ஸ்லம் டாக் மில்லியனர் என்கிற படத்திற்காக சிறந்த சவுண்டு இன்ஜினியர் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றவர் மலையாள திரை உலகை சேர்ந்த ரசூல் பூக்குட்டி. இதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் படங்களில் பணியாற்றி வரும் இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'தி சவுண்ட் ஸ்டோரி' என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.

இந்த நிலையில் தற்போது இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ள ரசூல் பூக்குட்டி மலையாளத்தில் 'ஒட்ட' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் சத்யராஜ் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் மம்தா மோகன்தாஸ், ஆசிப் அலி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

அதைவிட முக்கியமாக நடிகை ஷோபனா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கடந்த எண்பதுகளின் இறுதியில் வெளியான வாத்தியார் வீட்டு பிள்ளை மற்றும் மல்லுவேட்டி மைனர் என இரண்டு படங்களில் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷோபனா. இந்த நிலையில் 32 ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் தற்போது மலையாள படத்திற்காக இணைந்துள்ளது உண்மையிலேயே ஆச்சரியமான நிகழ்வுதான்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement