Advertisement

'கேடி-தி டெவில்' : சத்யவதியாக இணைந்த ஷில்பா ஷெட்டி

பாலிவுட்டின் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் குஷி, மிஸ்டர் ரோமியோ போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிகளிலும் நடித்துள்ள இவர் அடுத்து கன்னடத்தில் உருவாகும் பான் இந்தியா படமான 'கேடி-தி டெவில்'-ல் இணைந்துள்ளார். இதில் அவர் சத்யவதி எனும் வேடத்தில் நடிக்கிறார்.

நடிகர் துருவா சர்ஜா நாயகனாக நடிக்கும் இந்தபடம் 1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது. ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். பிரேம் இயக்குகிறார். இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

ஷில்பா ஷெட்டி கூறுகையில், “ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் ஒரு மாபெரும் போரை பற்றிய கதை தான் கேடி தி டெவில். ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் ஒரு 'சத்யவதி' தேவை. இந்த 'கேடி' போர்க்களத்தில் நானும் ஒரு அதிசக்தி வாய்ந்த கதாப்பாத்திரத்தில் சத்தியவதியாக நடிப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி'' என்றார்.

பன்மொழி படமாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement