Advertisement

18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்!

தற்போது நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். தற்போது இந்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஜெய்பூரில் நடைபெற்று வருகிறது. அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பும் ஆந்திரா வனப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் படமும், கமலின் இந்தியன்-2 படமும் ஒரே நாளில் திரைக்கு வர இருப்பதாக ஒரு தகவல் தற்போது கோலிவுட்டில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இதற்கு முன்பு ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் 2005ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் ரஜினி - கமல் நடித்த படங்கள் ஒரே நாளில் திரைக்கு வரப் போகின்றன.

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

    ரெண்டு பேர் நடுவுல பஞ்சை போட்டா பத்திக்கிற அளவு பகைமை, போட்டி இருந்தாலும் கட்டிபுடிச்சுக்கிட்டு ஒரு போட்டோ முதல் பக்கத்துல வரும். நாங்க ரெண்டு பெரும் நெருங்கின நண்பர்கள் என்ற அறிக்கையுடன் சினிமா பத்தின எல்லாமே பொய்தான்

  • Ba Ve Raghavulu - Chennai ,இந்தியா

    Athanaal enna. Tharpothu Vijay - Varisu, Ajith - Thunivu... Rendume nallathaan thiraiyarangugalla odititirukku.

  • Vijay - Chennai,இந்தியா

    இந்தியன் 2 ஜெயிலரை துவம்சம் செய்து விடும்

    • angbu ganesh - chennai,இந்தியா

      ama am

  • Ramaswami V - Petaling Jaya,மலேஷியா

    ரொம்ப முக்கியம் மக்களை இவற்றில் திசை திருப்பாமல் அவங்க அவங்க சொந்த வேலைகளை பார்க்க சொல்லுங்க

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement