Advertisement

அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்!

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் தற்போது அவர் அட்லி இயக்கி வரும் ஜவான் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். அவருடன் தீபிகா படுகோனே, நயன்தாரா, விஜய் சேதுபதி ,யோகி பாபு உட்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி ஜவான் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிவில் திரைக்கு வருகிறது.

மேலும் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் அட்லி மற்றும் பிரியாவின் திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த ஜனவரி 31ம் தேதி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அது குறித்த தகவலை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார் அட்லி. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அட்லியின் குழந்தையை நேரில் சென்று பார்த்திருக்கிறார் ஷாருக்கான். அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், அட்லியின் குழந்தையை நேரில் சென்று பார்த்தேன். மிகவும் அழகாகவும், இனிமையாகவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement