Advertisement

விஜய் தேவரகொண்டா ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த சமந்தா

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாகவே மையோசிடிஸ் எனும் தசைநார் அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். யசோதா படத்திற்கு பிறகு கடந்த சில மாதங்களாக இதற்காக தீவிர சிகிச்சையும் எடுத்துக்கொண்டு வந்தார். இதற்கு முன்னதாக அவர் தெலுங்கில் சிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்கிற படத்தில் நடித்து வந்தார். அதே சமயம் சமந்தாவிற்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக குஷி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக மீண்டும் சுறுசுறுப்பாகி, உடற்பயிற்சி எல்லாம் மேற்கொண்டு தற்போது குஷி படத்தின் படப்பிடிப்பிற்கு திரும்பி நடித்து வருகிறார் சமந்தா.

இந்த நிலையில் தற்போது தன்னால் குஷி படத்தின் படப்பிடிப்பு தாமதமானது என்றும் கூறி தாமதத்திற்காக விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களிடம் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார் சமந்தா. அவருக்கு ஆறுதலும் ஆதரவும் அளிக்கும் விதமாக விஜய் தேவரகொண்டா கூறும்போது மிகப்பெரிய புன்னகையுடனும் முழு ஆரோக்கியத்துடனும் நீங்கள் திரும்பி வருவதற்காகத்தான் நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement