Advertisement

ரஜினிகாந்த் பாராட்டு, ஜெயம் ரவி பெரும் மகிழ்ச்சி

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தில் தலைப்பின் நாயகனாக அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். அவருடைய நடிப்பும் படத்தில் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து ஜெயம் ரவிக்கு அவருடைய பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அது குறித்து ஜெயம் ரவி சற்று முன் தன்னுடைய டுவிட்டரில்,

“அந்த ஒரு நிமிட உரையாடல் எனது நாள், எனது வருடமாகியது, எனது வாழ்க்கைக்கு ஒரு முழு அர்த்தத்தைக் கொடுத்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், குழந்தை போன்ற ஆர்வத்துக்கும் நன்றி தலைவா. நீங்கள் படத்தையும், எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும், பணிவும், ஆசீர்வாதமும் பெற்றேன்,” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா

    "கோமா(ளி)" படத்தில் கோமாவில் இருந்து விழிக்கும் கதாநாயகன் ரவி "ரஜினிகாந்த் மக்கள் முன்னர் "நான் அரசியலுக்கு வருவது உறுதி" என்று பேசுவதைப்பார்த்து கதாநாயகன் ரவி கிண்டல் அடிப்பார் - அதை எப்படியோ நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டார்கள். இப்போது ரஜினிகாந்த் மணிரத்னம் இயக்கிய "பொன்னியின் செல்வன்" படத்தைப் பார்த்துவிட்டு மணிரத்னம் அவர்களைப் பாராட்டி இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன், விட்டுவிட்டு கிண்டல் பண்ணிய ரவியை புகழ்ந்தது வெட்கக்கேடாக உள்ளது.

  • hari -

    this should have been taken as web series. so many fine details are missed from novel. present condition it looks like trailer for novel. even amateur drama troop will do better rehearsals. here except jayaram no one had intent.

  • Rajam Krishnamoorthy - Mumbai,இந்தியா

    The appreciation should come from general public who knows and understand Indian Culture and Indian History not from co-actor.

  • ranjani - san diego,யூ.எஸ்.ஏ

    இது படமல்ல 2 hour 50 minutes Highlights. மூன்று பாகமாக எடுக்க வேண்டியதை ஒரே பாகத்தில் அடைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு திருப்தி இல்லை.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement