Advertisement

டிச.,9ல் திரைக்கு வரும் ரேவதி - கஜோலின் 'சலாம் வெங்கி'

கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக திரையுலகில் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருபவர் நடிகை ரேவதி. இடையில் இயக்குனராக அவதாரம் எடுத்த அவர் 2002ல் 'மித்ர மை பிரண்ட்' என்கிற ஆங்கில படத்தை இயக்கினார். பின்னர் இந்தியில் சல்மான்கான், அபிஷேக் பச்சனை இணைத்து 'பிர் மிலங்கே' படத்தை இயக்கினார். அதன்பிறகு சிறிய இடைவெளியில் மலையாளம் மற்றும் இந்தியில் ஆந்தாலாஜி படங்களில் தலா ஒரு எபிசோடை மட்டும் இயக்கினார்.

இந்தநிலையில் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் முழு வீச்சில் டைரக்சனில் இறங்கியுள்ள ரேவதி இந்தமுறை கஜோலை கதையின் நாயகியாக வைத்து ஹிந்தியில் சலாம் வெங்கி என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் வரும் டிச-9ம் தேதி ரிலீசாகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் வாழ்க்கையில் எதிர்ப்படும் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் சுஜாதா என்கிற கதாபாத்திரத்தில் கஜோல் நடித்துள்ளார்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement