Advertisement

போரடித்த சாப்பாடு ; ராஷ்மிகாவை ஸ்பெஷலாக கவனித்த ரன்பீர் கபூர்

புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக மாறியதோடு தற்போது பாலிவுட்டிலும் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக புஷ்பா படத்தில் சாமி சாமி பாடலுக்கு இவர் ஆடிய நடனம் அனைத்து பாலிவுட் பிரபலங்களையும் கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். பாலிவுட்டில் தற்போது அமிதாப்பச்சனுடன் இவர் இணைந்து நடித்துள்ள குட்பை என்கிற படம் வரும் அக்டோபர் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னொரு படமான மிஷன் மஞ்சு விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் திடீரென ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு ராஷ்மிகாவுக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை பரினிதி சோப்ரா சில காரணங்களால் விலகி விட அவருக்கு பதிலாக தற்போது ராஷ்மிகா இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ராஷ்மிகாவுக்கு ஒரே விதமான காலை உணவை சாப்பிட்டு போரடித்து விட்டதாம். இதுகுறித்து நாயகன் ரன்பீர் கபூரிடம் குறைபட்டுக்கொள்ள, அவரோ தனது தனிப்பட்ட சமையல்காரரை வைத்து ராஷ்மிகாவிற்கு ஸ்பெஷலாக உணவு சமைத்துக்கொண்டு வந்து தந்துள்ளார்.

ஆனாலும் அதுவும் படப்பிடிப்பில் கொடுக்கப்படும் சாப்பாடு போலவே இருப்பதைப் பார்த்து முதலில் அதிர்ச்சியான ராஷ்மிகா, பின்னர் அதை சாப்பிட்டு பார்த்துவிட்டு அதன் சுவை முற்றிலும் வேறாக, விரும்பி உண்ணக்கூடியதாக இருப்பதை உணர்ந்தாராம். இதுகுறித்து ரன்பீர் கபூரிடம் ராஷ்மிகா கூறும்போது உங்களுக்கு கிடைத்தது போன்று திறமையான சமையல்காரர் எங்களுக்கு கிடைக்கவில்லையே என்று தனது மனக்குறையை வெளிப்படுத்தினாராம்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement