Advertisement

‛லால் சிங் சத்தா' படத்திற்கு எதிராக எழுந்த குரல் : வருத்தம் தெரிவித்த ஆமீர்கான்

ஹிந்தியில் ஆமீர்கான், கரீனா கபூர் நடித்துள்ள படம் ‛லால் சிங் சத்தா'. ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீ-மேக் இது. இந்த படம் நாளை (ஆக.,11) வெளியாக உள்ளது. ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. இதற்காக நாடு முழுக்க ஆமீர்கான் உள்ளிட்ட படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த படத்தை புறக்கணியுங்கள் என சமூகவலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே டிரெண்ட் ஆனது. காரணம் சில ஆண்டுகளுக்கு முன் ஆமீர்கான் ஒரு பேட்டியில், ‛‛நாட்டில் சகிப்புத்தன்மையின்மை குறைந்து கொண்டே வருகிறது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறலாமா'' என தனது மனைவி கூறியதாக பொதுவெளியில் ஆமீர்கான் கூறினார். இதை குறிப்பிட்டு அவரது படத்தை புறக்கணிக்க சொல்லி இப்போது நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் தனது படத்தை புறக்கணிக்காதீர்கள் என ஆமீர்கான் வேண்டுகோள் வைத்தார். அதேசமயம், இது ஆமீர்கானால் உருவாக்கப்பட்ட பப்ளிசிட்டி என ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டினார். தொடர்ந்து லால் சிங் சத்தா படத்தை புறக்கணியுங்கள் என சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆன நிலையில் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார் ஆமீர்கான்.

அவர் கூறுகையில், ‛‛எந்த வகையிலும் யாரையாவது நான் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. லால் சிங் சத்தா படத்தை பார்க்க யாருக்கும் விருப்பம் இல்லையென்றால் அவர்களின் உணர்வுகளுக்கு நான் மதிப்பு அளிக்கிறேன்'' என தெரிவித்துள்ளார் ஆமீர்கான்.

ஆமீர்கான் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த பிரச்னையால் தனது படத்திற்கு எந்த பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதால் இப்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

 • kalyanaraman -

  அடுத்து வீட்டில் தேசியக்கொடியை ஏற்றி நாடகம் போட்டுவிட்டார்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  நண்பர் தயவில் இந்த படத்தை ப்ரிவ்யூ ஷோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் சுமாராகத்தான் இருக்கிறது.

 • Rajamani Shanmugavelu - Male,மாலத்தீவு

  பேசாம பாக்கிஸ்தான் இல்ல ஆப்கானிஸ்தான் போயிருங்க.. அங்கதான் எல்லா சுதந்திரமும் இருக்கு...நீங்க வாழ தகுதியான நாடு

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  மூர்கன் புது பெயரில் தமிழனாம்

 • Yogeshananda - Erode,இந்தியா

  இவன் ஒரு தேசத் துரோகி.. தீவிரவாதி.. இவன் படங்களை புறக்கணிக்க வேண்டும்.

 • Tamil - Trichy,இந்தியா

  இலவச விளம்பரம் கொடுத்த சகிப்புத்தண்மை அற்றவர்களுக்கு நன்றி . படம் சூப்பர் ஹிட் அடிக்கும்.

  • Desi - Chennai,இந்தியா

   குட் ஜோக். கோ மேன் 3/4

  • kamuda munnetra kazhagam - ri,சவுதி அரேபியா

   ஒரே கலர் காலரா தெரியுது , அதுவும் அந்த பச்சை கலர் இருக்கே அது உங்கள் கருத்தில் மிளிர்கிறது , அதை எடுத்துவிட்டு பேசினால் உங்களுக்கு மதவாதி என்றொரு பெயர் வைக்க தேவையில்லை

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

   மூர்க்கத்துக்கும் Tamil க்கும் என்ன சம்பந்தம் ????

  • Tamil - Trichy,இந்தியா

   மாட்டு அரசியல் பண்றவனுக்கும் ராமக்ரிஷ்ணனுக்கும் உள்ள சம்பந்தம்.

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

   அவன் செய்கைக்கு நீ ஆதரவு கொடுக்குற.. அவன் மகளை பிகினி உடையில் நடிக்க அனுமதிக்கிறான்... உன் குடும்பத்தாரை நீ இப்படி நடத்துவியா ?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement