Advertisement

சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில்

தென்னிந்தியத் திரையுலகில் முக்கியமான காதல் ஜோடியாக இருந்து கல்யாணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிந்தவர்கள் நாகசைதன்யா, சமந்தா. இருவரது திருமணப் பிரிவு பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனாலும், இதுவரையிலும் இருவரும் அவர்களது பிரிவைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டதில்லை.

தற்போது ஆமீர்கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நாகசைதன்யா. அதற்காக பிரமோஷன்களுக்காக அவர் ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறார். மும்பைக்குச் சென்ற போது ஒரு பேட்டியில் அவரிடம், 'சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்…?”, என்று கேட்டுள்ளார்கள். அதற்கு நாகசைதன்யா, “அவருக்கு ஹை சொல்வேன், கட்டிப்பிடிப்பேன்,” என்று கூலாக பதில் சொல்லியுள்ளார்.

ஆனால், சமீபத்தில் காபி வித் கரன் நிகழ்ச்சியில் சமந்தாவிடம், “நாகசைதன்யாவையும், உங்களையும் ஒரு அறைக்குள் தள்ளினால் என்ன செய்வீர்கள்,” என்று கேட்கப்பட்டதற்கு, “யாராவது ஒருவர் கூரான ஆயுதங்களை மறைப்போம்,” என்று பதிலளித்துள்ளார்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement