Advertisement

ராஜ்யசபா எம்.பி.யாக இளையராஜா நியமனம் : பிரதமர், ரஜினி, கமல் வாழ்த்து

புதுடில்லி : ராஜ்யசபா எம்.பி.யாக தமிழகத்தைச் சேர்ந்த சினிமா இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சட்டம். விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ராஜ்யசபாவிற்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா ராஜ்யபசபா நியமன எம்.பி.யாக இன்று (ஜூலை 07) அறிவிக்கப்பட்டார். தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா, அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.பிரதமர் வாழ்த்து
இளையராஜா எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛தலைமுறைகளைக் கடந்து இளையராஜா அவர்களின் அற்புத படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்து வருகிறது. அவரது இசைப் படைப்புகள் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவன. அவரது படைப்புகளைப் போலவே, எழுச்சி ஊட்டுவதாய் அவரது வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளது. எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர். அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது'' என தெரிவித்துள்ளார்.

ரஜினி வாழ்த்து
ரஜினி வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், ‛‛மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.கமல் வாழ்த்து
கமல் வெளியிட்ட வாழ்த்து குறிப்பில், ‛‛ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்க வேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்'' என தெரிவித்துள்ளார்.

எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்
ராஜ்சபா எம்பி.,யாக இளையராஜா நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக இளையராஜாவை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அவர் அமெரிக்காவில் இருப்பதால் பேச முடியவில்லை. வரும் 20ம் தேதி தான் சென்னை திரும்புகிறார். ஆனால் அவர் தரப்பில் கூறுகையில், ‛‛இளையராஜா எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்று இந்த எம்பி பதவிக்கு அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர் என அவரை முத்திரை குத்த வேண்டாம்'' என்றனர்.


Advertisement
 

Home வாசகர் கருத்து (26)

 • abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா

  யாரையும் துதிபாடி பதவி வாங்கவில்லை

 • தமிழன் - Madurai,இந்தியா

  கமல் சொல்லிருக்குறது வாழ்த்து மாதிரி தெரியல்ல, ஏதோ வஞ்சப்புகழ்ச்சி மாதிரி இருக்கு.

 • நல்லவன் - chennai,இந்தியா

  வாழ்த்துக்கல். நீங்க வாசிக்க - அவரு பாட்டுப்பாட - அட மக்களை படு குஷியா வச்சிப்பிங்க போங்க....

 • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

  மோடியை அம்பேத்காருடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசியதற்கு பரிசு.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  இளையராஜா தலை கணம் படைத்தவர் தான். முன் கோபம் அதிகம்.பண விஷயத்தில் கொஞ்சம் எக்கு தப்பு ஆனால் துடைப்பத்தை துடைப்பம் என்று சொல்லும் உண்மை உரம் படைத்தவர். நல்லவரை நல்லவர் என்பார்.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  அருமை. இளையராஜா வாழ்க, திமுக ஒழிக

 • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

  எந்த ஒரு குறைந்தபட்ச தகுதியும் இல்லாவிட்டாலும் மோடியை வாழ்த்தினால் பதவி. நானும் இளையராசாவுக்கு கவர்னர் பதவி கிடைக்குமென்று எதிர்பார்த்தேன்... என்ன செய்வது. சொல்லும்படியாக தலைவர்கள் யாரும் இல்லாததால் எல்லாரும் தலைவர்களே

 • M Ramachandran - Chennai,இந்தியா

  மகிழ்ச்சியான செய்தி.தமிழ் நாட்டிற்கும் தமிழ் திரை பட உலகிற்கும் பெருமை. வேற்றுமை மறந்து நாமும் வாழ்த்துவோம்.

 • sankaseshan - mumbai,இந்தியா

  வழக்கம் போல கமலஹாசனின் வாழ்த்து

 • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

  அந்த பதவிக்கு தகுதியானவர் தான் ஆனால், அதை அவர் பெறுவதற்காக நடந்து கொண்ட விதம் ஏர்புடையது அல்ல

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  வன்முறையை காரணம் காட்டி பல நாடுகள் தடை செய்தவரை ஜனநாயகவாதி அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டால் வந்த கைமேல் பலன். சிறந்த இசையினால் மக்களின் மக்கள் மனதில் இடம் பிடித்தவர், வரம்புக்கு மீறி கூவியதனால் மக்களின் அபிமானத்திலிருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டவர். கட்சிக்கு அப்பாற்பட்டவர் என்று கூறினாலும் அங்கு நடக்கும் வாக்களிப்புக்கு கொடுத்தவருக்கே ஆதரவு கொடுக்க வேண்டிய நிலை ஆகும் என்பதை தமிழர்கள் நன்கறிவார்கள்.

  • raja - Cotonou,பெனின்

   திருட்டு திராவிட கொள்ளை கூட்ட கொத்தடிமைகள் வயிற்றெரிச்ச உளறல் சூப்பர்

  • Venkatakrishnan - Mumbai,இந்தியா

   ஆரம்பிச்சுட்டான் யா நம்ம கூஜாவான ராஜா...

 • raja - Cotonou,பெனின்

  இப்போ அவரோட முஸ்லீம் பையன் இந்தி தெரியாது போடான்னு ஒரு சட்டையையும் கருப்பு திராவிடன் நான் என்கிற போட்டாவையும் போடுவான் பாருங்களேன்.....

 • raja - Cotonou,பெனின்

  ippo

 • murugan - tamilnadu,இந்தியா

  இளையராஜா சாருக்கு என்னோட வாழ்த்துக்கள். அண்ணல் இந்த பதவியை முதலிலேயே கொடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்துருக்கும்.

 • தமிழ் -

  தெரியும்.

 • MANI DELHI - Delhi,இந்தியா

  இறை நம்பிக்கை உள்ளவர். இறைவனை துதிப்பவர். அது ஒன்றே போதும் அவருக்கு வேறெவனும் ஆதரவு தர தேவையே இல்லை... குறிப்பாக தமிழ் நாட்டை சிறந்தவர் என்பதாலேயே திராவிட கழிசடைகள் ஆதரிக்க தேவையும் இல்லை...

  • Venkatakrishnan - Mumbai,இந்தியா

   மோடிக்கு துதிபாடாமல் இருந்திருந்தால் இந்த பதவி சாத்தியம் இல்லை என்பது உனக்கும் தெரியும் மணி... ஹாஹா

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  arasiyal katchiyai chaaraathavarkalukku vaazhtthu therivikka kootaathaa? chirappu mikka pathaviyai thaanae petrukiraar. vaazhtthukkal. yaetru kontaal yaetru kollunkal.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  வாழ்த்துக்கள் இசைஞானி அவர்களே.

 • Chellah Anand - chennai,இந்தியா

  கரெக்ட் ....அவர் எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்ல ....நம்பீட்டொம் ....

  • theruvasagan - ,

   கிடையாதுதான்.

 • Chellah Anand - chennai,இந்தியா

  …..

  • raja - Cotonou,பெனின்

   திருட்டு திராவிட கொள்ளை கூட்ட கொத்தடிமையே உட்டா நீ பி டீ உஷா கூட பிஜேபி இன்னு சொல்லுவ போல....

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement