Load Image
Advertisement
dinamalar telegram

குவைத்தில் கல்விச் சுற்றுலா

குவைத் : குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் மாணவ, மாணவியருக்கு இஸ்லாமிய வகுப்புகளை வாரந்தோறும் வழங்கி வருகிறது. இந்த வகுப்புகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் கல்விச் சுற்றுலாவாக குவைத் தேசிய அருங்காட்சியகம் மற்றும் அமெரிக்க கலாச்சார மையம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


இந்த கல்விச் சுற்றுலா மூலம் மாணவ, மாணவியர் குவைத் நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள உதவியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.


- நமது செய்தியாளர் காஹிலா

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement