Load Image
Advertisement
dinamalar telegram

அக்ஷதா சேஷமணி, தன்ஷிகா விஜயராஜின் அரங்கேற்றம்

சமீபத்தில் என் கல்லூரித்தோழர் சேஷமணி புதல்வி அக்ஷதா சேஷமணியின் நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அக்ஷதா சேஷமணியுடன் (14 வயது ) தன்ஷிகா விஜயராஜும் (19 வயது) தம் நாட்டியத்தை அரங்கேற்றம் செய்தார். இவ்விருவரும் இவ்விளம் வயதில் அவ்வளவு நேர்த்தியுடன் மணிக்கணக்காக நாட்டியம் புரிந்தது காண்போரை மிகவும் கவர்ந்தது.நிகழ்ச்சி வாஷிங்டன் மாகாணம் ரென்டன் நகரில் ஐகியா கலையரங்கத்தில் நவம்பர் 19, 2023 அன்று விமரிசையாக நடைபெற்றது. அக்ஷதாவும் தன்ஷிகாவும் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் பயின்று வருகின்றனர். இவர்களின் குரு சந்தியா ராஜகோபால் (பார்கவி பரத நாட்யாலயா) தலைமையில் இந்த அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த அரங்கேற்றத்தை மாதங்கி சேஷமணி அழகாக தொகுத்து வழங்கினார்.இந்த அரங்கேற்றத்திற்கு வீணா கிரிஷ், சுஷீலா நரசிம்மன், சந்தியா ராஜகோபால், அனிருத் பார்த்தசாரதி, சம்யுக்தா கௌசிக் ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக அக்ஷதா விநாயகர் துதி ஒன்றைப் பாடினார். அதன் பின் குரு திருமதி சந்தியா சலங்கை பூஜை செய்து மாணவிகளை ஆசிர்வதித்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.புஷ்பாஞ்சலிக்குப பிறகு தில்லை அம்பல நடராஜரைப் போற்றி இருவரும் சுழன்று நர்த்தனம் ஆடினர். அதன் பின் கண்ணனைப பற்றி இருவரும் ஆடியது பிருந்தாவனத்தை தத்ரூபமாக நம் கண் முன்னே கொண்டு வந்தது. கண்ணன் வெண்ணை திருடியது பிருந்தாவனத்திலா அல்லது வாஷிங்டனிலா என்று நமக்கு சந்தேகமே வந்து விட்டது! அதன் பின்னர் மஹிஷாசுர மர்த்தினி நடனத்தின் பொழுது இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர். காளியின் கோபத்தில் அரங்கமே நிசப்தம் ஆனது.இடைவேளைக்கு பிறகு இரண்டாவது பாதியில் மதுரையை ஆண்ட மீனாட்சி அம்மனின் வரலாற்றை அழகாக ஆடி அனைவரையும் ஆனந்தப்படுத்தினர். சீதையின் சுயம்வரத்தை தத்ரூபமாக கொண்டு வந்து ராமர் சீதையை மணந்தது போல் நம் உள்ளத்தைக கொள்ளை கொண்டனர். அக்ஷதா “தேவி நீயே துணை” என்ற பாடலையும் தன்ஷிகாவின் நடனத்திற்கு பாடினார். ஆடலுடன் பாடலும் அருமையாக இருந்தது.முருகனின் காவடி ஆட்டத்தை இருவரும் இரண்டு மயில்கள் தோகை விரித்து ஆடுவது போல் ஆடினர். அதற்காக சியாட்டில் மழை கூட சிறிது நேரம் நின்றது! சிதம்பரம் கோவிலில் தில்லை அரசரை நந்தனார் காட்சி கொண்டதை அவர்கள் கண்முன்னே கொண்டு வந்தனர். இறுதியாக அக்ஷதாவும், தன்ஷிகாவும் அவர்கள் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருந்து 'வீர ராஜ சோழா' என்ற பாடலை நவ ரசமும் ததும்பும் விதத்தில் அவர்கள் தோழியருடன் நடனமாடி நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்தனர்.இதன்பின்னே நாவிற்கினிய அறுசுவை உணவு விருந்தினர் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அரங்கேற்றம் நிறைவு செய்த நாட்டிய மங்கைகள் இவ்வரங்கேற்றம் ஒரு முற்று அல்ல, இது ஒரு துவக்கம் என்று கருதி, நாட்டியக்கலையில் மென்மேலும் உச்சிகளைத் தொட என் மனமார்ந்த வாழ்த்துகள்

- தினமலர் வாசகர் தெயவ மெய்ய்ப்பன்

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement