Load Image
Advertisement
dinamalar telegram

தமிழ் நாடு அறக்கட்டளை ஹுஸ்டன் கிளையின் குழந்தைகள் தின விழா

தமிழ் நாடு அறங்கட்டளை நிறுவனத்தின் ஹூஸ்டன் கிளை “குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை அமெரிக்கா நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகள் தின நிகழ்ச்சியை நவம்பர் மாதம் 17ந்தேதி வெள்ளிக்கிழமையன்று மீனாட்சி திருக்கோவில் மண்டபத்தில் சிறப்பாக நடத்தியது்.தமிழ் நாடு அறக்கட்டளை ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி நான்காம் ஆண்டில் அமெரிக்க நாட்டில் புலம் பெயர்நத தன்னார்வலர்களால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு அவர்களின் கல்வி , சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார நிலையை மேம்படுத்துதல் , வசதி குறைந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி, பெண்களின் முன்னேற்றம், மனவளர்ச்சி குன்றியோர், உடல் ஊனமுற்றோருக்கு காப்பகங்கள் ஆகியவை தமிழ் நாடு அறக்கட்டளையின் ஒப்பற்ற நோக்கங்களாகும்.தமிழ்நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளை நிறுவனம் இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டு மே மாதம் பதினொன்றாம் நாளன்று அன்னையர் தின விழா கொண்டாட்டத்துடன் தொடங்கியது. ஹூஸ்டன் கிளை அமைப்பு தமிழ் நாட்டில் “திருவாரூர் “ மாவட்டத்தை “சகோதரி” மாவட்டமாக எடுத்துக்கொண்டு , வசதி குறைந்த குழந்தைகளின் கல்வி மேம்பாடு, பெண்களின் முன்னேற்றம் என பல்வேறு சமுதாய மேம்பாட்டுத்திட்டங்களை செயல் படுத்திக்கொண்டு வருகிறது.தாழ்த்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து அவர்களின் விருப்பமான கல்லூரிப்படிப்பு வரை நிதி உதவும் திட்டமாக செயல் பட்டு வருகிறது். இந்த அஆஇ திட்டத்தை திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டிலிருந்து ஆறு பள்ளிகளில் உருவாக்கப்பட்டு , ஏறத்தாழ ஐம்பது மாணவர்களை வளப்படுத்தியது என்றால் மிகையாகாது. இரண்டாயிரத்து இருபத்தி மூன்று , இருபத்தி நான்கு கல்வியாண்டிற்கு ஆறு பள்ளிகளுக்கு நிதி திரட்டும் முயற்சியாக , “கல்யாண் கோல்டன் ரிதம்ஸ்” ஆர்க்கெஸ்டாராவுடன் , டிவி இன்னிசை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது .இரவு 6:30 மணியளவில் , கலந்துரையாடலுக்குப் பிறகு இரவு விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஹூஸ்டன் கிளையின் தலைவி இலக்குமி பாவா அனைவரையும் வரவேற்று தமிழ் நாடு அறக்கட்டளையின் துவக்கம் மற்றும் குறிக்கோள்களை விவரித்தார். இவரைத் தொடரந்து செயலாளர் சுமதி சீனிவாசன் ஹூஸ்டன் கிளையின் தனித்துவம் , சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தார் .பொருளாளர் மீனா சொக்கலிங்கம் ஹூஸ்டன் கிளையின் வரவு , செலவு , நன்கொடை மூலம் சேரும் நிதி மற்றும் அடுத்து வரும் இரண்டு கல்வியாண்டுகளுக்காக தேவைப்படும் நிதியைப்பற்றி விளக்கினார்.இந்த குழந்தைகள் தின நிகழ்ச்சியை ஓரு நிதி திரட்டும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்னிசை விருந்து மூலமாக முப்பதாயிரம் டாலர்கள் ( $30000) நிதி திரட்டும் குறிக்கோளுடன் இன்னிசைக்கச்சேரி தொடங்கியது . குறள்கூடல் செம்மொழி அறக்கட்டளை அமெரிக்கா நிறுவனம் குழந்தைகள் தின நிகழ்ச்சிக்காக “குறளுக்கோர் ஓவியம்” என்ற தலைப்பில் அனைத்துலக ஓவியப்போட்டியை நடத்தியது. போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட ஒவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அனைத்து ஓவியங்களும் பொது மக்களின் பார்வைக்காக வரிசைப்படுத்தி வளாகத்தில் வைத்திருந்தன.விழாவிற்கு வந்திருந்த அனைத்து மக்களும் ஓவியங்களைப்பார்வையிட்டு , சிறந்த மூன்று ஓவியங்களுக்கு வாக்களித்தனர் . குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை - அமெரிக்கா நிறுவனர் மாலா கோபால் தேர்வு செய்யப்பட்ட முதல் மூள்று ஓவியங்களையும் அதறகுரிய பரிசுத்தொகையையும் இன்னிசை நிகழ்ச்சியின் இடைவேளையின் போது அறிவித்தார்.கோல்டன் ரிதம்ஸ் ஆர்க்கெஸ்ட்ராவுடன் டிவி பாடகர்கள் ராஜகணபதி , ரோஷிணி , சுஜாதா, சாம் கீர்த்தன் , ரபி மனோவுடன் ஹூஸ்டனைச்சேர்ந்த ஆதி கோபாலும் மூன்று மணி நேரம் இடை விடாது ஆயிரத்து தொள்ளாயிரத்து எனபது , தொன்னூறு மற்றும் இரண்டாயிரம்ஆண்டுகளிலுருந்து இனிய பாடல்களைப்பாடி மக்களை இசை வெள்ளத்தில் நனையச்செய்தார்கள் .ஆதி கோபால்.’ தூரிகையின் தீண்டல்“ என்ற பாடலை எழுதி இசையமைத்து 2023 செப்டம்பர் மாதம் வெளியிட்டார். இந்த ஆல்பத்திலிருக்கும் பாடலையும் , “ரோஜா ரோஜா” பாடலையும் ரோஷிணியுடனும் சுஜாதாவுடனும் பாடி மக்களைப் பரவசப்படுத்தினார் .இறுதியாகப்பாடிய பத்து குத்துப்பாடல்களுக்கு மக்கள் உற்சாகத்துடன் ஆடி மகிழ்ந்தனர் . இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பாடகர்களையும் இசைக்குழுவினரையும் ஹூஸ்டன் அறக்கட்டளை நிறுவனரகள் அன்பளிப்பு வழங்கி வாழ்த்திக கௌரவித்ததனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து மக்களுக்கும் , தன்னார்வலர்களுக்கும் மற்றும் கொடையாளிகளுக்கும் அறக்கட்டளையின் சார்பாக செயலர் நன்றி கூறினார் .
- தினமலர் வாசகர் சோலையப்பா சொக்கலிங்கம்

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement