Load Image
Advertisement
dinamalar telegram

அபுதாபியில் ஷேக் ஜாயித் திருவிழா

அபுதாபி : அபுதாபியின் அல் வத்பா பகுதியில் கடந்த நவம்பர் 17 ந் தேதி ஷேக் ஜாயித் திருவிழா தொடங்கியது. அமீரகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும்படி இந்த திருவிழா நடக்கிறது. அடுத்த ஆண்டு 2024 மார்ச் மாதம் 9 ஆம் தேதி வரை 114 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கிறது.
ஒவ்வொரு நாளும் இந்த திருவிழாவில் விதவிதமான நிகழ்ச்சிகள் நடக்கிறது. குறிப்பாக ஆளில்லா விமான காட்சி, அமீரக நீரூற்று காட்சி, ராணுவ பாரம்பரிய இசை நிகழ்ச்சி, குழந்தைகள் பங்கேற்கும் நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. வார விடுமுறை நாட்களில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இந்த திருவிழாவானது தினமும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும், வார விடுமுறை நாட்களில் நள்ளிரவு 1 மணி வரையிலும் பொதுமக்கள் பார்வையிட திறந்திருக்கும். இந்த திருவிழாவில் அரபு, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உணவு வகைகளும் வைக்கப்பட்டுள்ளது. முழு குடும்பத்தினரும் தங்களது பொழுதை போக்கும் வகையில் இந்த கண்காட்சி இருந்து வருகிறது.



- நமது செய்தியாளர் காஹிலா

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement