அலாரிப்பு பரதநாட்டிய இசை தொகுப்பை மலர் எவ்வாறு மொட்டில் இருந்து மணம் மிக்க புஷ்பமாக மாறுதலை குறிப்பதை போன்று ரூபக தாளத்தில் நடனமாடி மகிழ்வித்தார். நடனக்கலையில் முதன்மையாகவும் மற்றும் உயர்வானதாகவும் போற்றப்படும் வர்ணம் நடன பகுதியை மிக காண கண் கோடி வேண்டும் என்ற பாடலுக்கு (ராகம்-காம்போஜி: தாளம்-ஆதி) கபாலீஸ்வரர் கோவில் சிவன் கடவுளை பாராட்டும் விதமாக மெல்லிசை கேற்ற தாளத்துடன் கூடிய பல்வேறு நாட்டிய பாவனைகளை கற்றுக்கொண்ட அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தி நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரை மகிழ்வித்தார். அம்மன் பாடல் வரிசையில் கற்பகவல்லி நின் பொற்பதங்கள் என்ற பாட்டிற்கும் (ராகம்: ராகமாலிகா: தாளம்: ஆதி) கபாலீஸ்வரர் கோவில் சிவன் கடவுளின் துணைவியார் கற்பகாம்பாள் அம்மனை போற்றும் விதமாக நடன அமைப்பு பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து தமிழ் கடவுள் முருகரை போற்றும் விதமாக அருணகிரிநாதர் நாவில் முருகர் இயற்றிய திருப்புகழ் முதல் பகுதியில் வரும் முத்தை தரு பாடலுக்கு (ராகம்: ஷண்முகப்ரியா: தாளம்: மிஸ்ரசாப்பு) பாடகர்கள் பாடலை ஆறே மூச்சில் பாட அதற்கு கீர்த்தனா நடனம் ஆடி கலந்து கொண்டோரின் கைகளில் தாளம் போட வைத்தார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கிருஷ்ணரின் அருட்தொண்டர் மீரா, கிருஷ்ணரிடம் வைத்து இருந்த பக்தி கதையை ஸ்ரேயா நாராயணன் மிக தெள்ளத்தெளிவாக தூய தமிழில் அனைவருக்கும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து கவிஞர் மீரா இயற்றிய ஜஹோலோட் ராதா என்ற பஜனை பாடலுக்கு (ராகம்: ஹம்சனந்தி: தாளம்: ஆதி) கிருஷ்ணா மற்றும் ராதா காதல் கதைகளை நாட்டிய வடிவமாக நம் கண்முன்னே கொண்டுவந்து அனைவைரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
நடன நிகழ்ச்சியின் இறுதி கட்டமாக நடன மங்கை தில்லானா பகுதியை (ராகம்: அமிர்தவர்ஷினி: தாளம்: ஆதி) மிக சிறப்புடன் பலவித மெல்லிசைக்கு துடிப்பாக நடனமாடி அனைவரையும் கவர்ந்தது. நடன நிகழ்ச்சியின் பாரம்பரிய முறையில் கீர்த்தனா நிகழ்ச்சியினை நன்றாக நடத்தி கொடுத்தமைக்கு எல்லாம் வல்ல கடவுளுக்கும், நடன கலையை கற்றுக் கொடுத்த ஆசிரிய பெருமக்களுக்கும், நடன நிகழ்ச்சிக்கு பாடல் மற்றும் இன்னிசை வடிவம் கொடுத்த வாய்ப்பட்டு மற்றும் இசை கலைஞர்களுக்கு, மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் இசை நன்றி கூறும் விதமாக ஆரத்தி மற்றும் மங்களம் பகுதியை (ராகம்: சௌராஷ்ட்ரம்: தாளம்: ஆதி) மிகச்சிறப்பாக நடனமாடி நிகழ்ச்சியினை நிறைவேற்றினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் கீர்த்தனா முத்துக்குமாருக்கு நடன ஆசிரியைகள் ஷீலா பிட்சுமோனி நாராயணன், ஸ்ரேயா நாராயணன் பட்டம் வழங்கி வாழ்த்தினர்.
நடன நிகழ்ச்சிக்கு மிகவும் பக்கத்துணையாக இருந்து நடனத்திற்கு மேலும் மெருகூட்டிய வாய்ப்பட்டு மற்றும் இசை குழுவினர்களுக்கு கீர்த்தனா பரிசுகளை வழங்கி ஆசீர்வாதம் பெற்றார்.
வாய்ப்பட்டு மற்றும் இசை குழுவினர்கள்: நடன ஆசிரியைகள் மற்றும் நட்டுவாங்கம்- ஷீலா பிட்சுமோனி நாராயணன், ஸ்ரேயா நாராயணன்; வாய்ப்பாட்டு - ஆசிரியைகள் சாவித்திரி ராமானந்த - நியூயார்க், சுனிதா சரவணன் - தாம்பா; வீணை மற்றும் புல்லாங்குழல் கலைஞர் -ப்ரீத்தி சுந்தரேசன். ஜாக்சன்வில்லே; கி போர்டு கலைஞர் -கே.வி.ஆர். சாரி, நியூயார்க்; மிருதங்கம் -முரளி பாலச்சந்திரன், நியூயார்க்; வயலின் கலைஞர் - ஸ்ரீஜித் கோபி, ஜாக்சன்வில்லே கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி நிறைவாக தங்கள் மகளின் அரங்கேற்ற நடன நிகழ்ச்சியினை வெகு சிறப்பாக நடத்தி கொடுத்த நடன கலைஞர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும், ஒப்பனை கலைஞர்களுக்கும், உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் கீர்த்தனாவின் பெற்றோர் பவித்ரா முத்துக்குமார்- முத்துக்குமார் மோகன்சிரம் தாழ்த்தி நன்றி நவிழ்ந்தினர்.
இனிதே கீர்த்தனா முத்துக்குமாரின் பரதநாட்டியம் அரங்கேற்ற நிகழ்ச்சி அறுசுவை உடன் கூடிய இரவு உணவுடன் நிறைவுற்றது.
- நமது செய்தியாளர் ரமேஷ் பாலாஜி வாசுதேவன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!