துபாயில் மாணவிகளுக்கான சர்வதேச திருக்குர்ஆன் போட்டி
துபாய் : துபாய் அல் மம்சார் பகுதியில் உள்ள அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் அமைப்பின் சார்பில் மாணவிகளுக்கான ஷேக்கா ஃபாத்திமா பிந்த் முபாரக் சர்வதேச திருக்குர்ஆன் போட்டி நடந்தது. இந்த போட்டி ஏழாவது ஆண்டாக நடந்தது. இதில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஜோர்டான் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் முதல் பரிசை ஜோர்டான் நாட்டு மாணவி முதல் பரிசையும், பஹ்ரைன் நாட்டு மாணவி இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!