கால்வாய் இழுவைப் பாதையில் ஒரு சைக்கிள் பயணம்!
அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள செசபீக் விரி குடாவை ஓகாயோவில் உள்ள ஓகாயோ நதியுடன் இணைக்கும் கால்வாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மேற்கு எல்லை துவங்கி கிழக்கு எல்லை வரை சந்தைப் பொருட்கள் மற்றும் கனிம வளங்களுக்கான வேகமான போக்குவரத்து வழியாக செசபீக் ஓகாயோ இழுவைப் பாதை (Chesapeake & Ohio Canal Towpath) செயல்பாட்டிலிருந்தது. பின்னர் இரயில் மற்றும் வாகனப் போக்குவரத்து வந்தபின் 20 ஆம் நூற்றாண்டின் பாதியில், இக்கால்வாயை ஒரு பொழுதுபோக்குப் பாதையாக மாற்றி தேசிய வரலாற்றுப் பூங்காவாக நிறுவப்பட்டது.இன்று, C&O Canal Towpath Trail சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கு ஒரு பிரபலமான இடமாகும். இது காடுகள், அழகிய நதி காட்சிகள் மற்றும் வரலாற்றுக் கட்டமைப்புகள் ஆகியவற்றின் பல்வேறு நிலப்பரப்பு வழியாகப் பயணிக்கிறது. இந்த பாதை தோராயமாக 184.5 மைல் (300 கிலோமீட்டர்) நீளமானது, இக்கால்வாயின் பாதை இயற்கையோடு ஒட்டி பயணம்செய்யும் பாதையாக உள்ளது. மேலும் இது வாஷிங்டன், DC-யில் உள்ள ஜார்ஜ்டவுனில் இருந்து மேரிலாந்தின் கம்பர்லேண்ட் நகரம் வரை நீண்டுள்ளது. பொதுமக்கள் இந்தப் பாதையில் நடைப்பயணம், மிதிவண்டி அல்லது குதிரையில் சவாரி செய்யலாம். இது முகாம், மீன்பிடித்தல் மற்றும் கால்வாயின் வரலாற்று இருப்பிடங்கள், நீர்வழிகள் மற்றும் பிற கட்டமைப்புகளை ஆராய்வதற்கான வாய்ப்புகளை அளிக்கிறது. பாதையில் உள்ள விளக்க மையங்கள் கால்வாயின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றிய விளக்கத்தை வழங்குகின்றன.நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் நண்பர்களோடு இணைந்து இந்த C&O Canal Towpath Trailஇல் மிதிவண்டிப் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இது உலகப் புகழ்பெற்ற சைக்கிள் ஓடுபாதை ஆகும். அமெரிக்காவின் பிற மாகாணங்களிலிருந்தும் மற்றும் ஐரோப்பாவிலிருந்தும் ஏராளமான சைக்கிள் ஓட்டிகள் வந்து சைக்கிள் இங்கு ஓட்டுகிறார்கள். இந்த கால்வாய் ஓடு பாதையில் காட்டு விலங்குகள் மான், கரடி, பலப் பறவை இனங்கள், ஊர்வன பாம்பு, ஆமை போன்றவற்றைப் பார்த்து மகிழலாம். கால்வாய் பாதையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள முகாம் அதிகாரிகளையும், அவர்களின் விருந்தோம்பல் கண்டு வியக்கிறோம்.இந்த சைக்கிள் பயணம் இயற்கை, பறவைகள், வனவிலங்குகள் என நமக்கு இடையே ஒரு பிணைப்பை உருவாக்குகிறது. இயற்கை நமக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறது. குறிப்பாக எப்படித் திட்டமிடுவது, ஆபத்தை எப்படி அணுகுவது மற்றும் எல்லா சூழ்நிலைகளிலும் நாம் எப்படி வாழவேண்டும் எனச் சிந்திக்க வைக்கிறது. கடந்த வார இறுதியில் நாங்கள் செய்த சைக்கிள் பயணப் படங்களைக் கண்டுகளியுங்கள். நன்றி!- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!