- நமது செய்தியாளர் காஹிலா
துபாய் : துபாய் சக்காபத்து சுன்னத் மர்கஸ் அமைப்பு சார்பில் அல் முத்தீனா பகுதியில் உள்ள அகமது பின் சுல்தான் பின் சுலைம் பள்ளிவாசலில் மீலாது விழாவையொட்டி தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் காயல்பட்டணம், முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியின் நிறுவனர் மவுலவி எச்.ஏ. அகமது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி கடந்த 16 ஆம் தேதி முதல் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார். ஒவ்வொரு நாளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை, வர்த்தகம், குடும்பம், சகோதரத்துவம் என பல்வேறு தலைப்புகளில் இருந்து கருத்துக்களை தெரிவிக்கிறார். இதன் மூலம் நபிகளாரின் வாழ்க்கை முறையை மிகவும் தத்ரூபமாக தெரிந்து கொள்ள உதவும் வகையில் இருந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியானது துபாயில் நடத்தப்பட்டாலும் ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் ஆர்வத்துடன் நிகழ்ச்சிக்கு தினமும் வருகின்றனர். வரும் 30 ஆம் தேதி வரை இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி தினமும் இரவு 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடக்கிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!