Load Image
Advertisement
dinamalar telegram

பேங்காக் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய விநாயகர் சதுர்த்தி விழா

ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில், நவராத்திரி தேரோட்டத்திற்கு அடுத்த படியாக, அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வது விநாயகர் சதுர்த்தி விழாவாகும், ஏனென்றால், விநாயகரின் உற்சவர் சிலை, அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் முடிந்த பிறகு, கோவிலுக்கு வெளியே, கோவில் அமைந்துள்ள பான் ரோடில் ஊர்வலமாக எடுத்து வரப் பட்டு பக்தர்களுக்காக காட்சி கொடுப்பார். பான் ரோடு முழுவதும் பக்தர்கள், விதம் விதமான விநாயகர் உருவங்களை அலங்கரித்து, மேடைகள் அமைத்து சிறப்பாக வழிபாடு செய்வார்கள்

இந்த ஆண்டும் காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் களைகட்ட ஆரம்பித்து, மதியத்திற்கு மேல் பக்தர்கள் வரிசை நீண்டு, ஒரு மணிநேர காத்திருப்பு தரிசனமாக மாறிய போதும், பக்தர்கள் வருகை இரவு 11மணி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. மாலை 4 மணிநேர முதலே, பான் ரோட்டில் வாகனங்கள் உள்ளே வரமுடியாத அளவுக்கு இருந்ததால், பான் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, பக்தர்களுக்காக எளிதாக தரிசனம் செய்யும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பொதுவாகவே தாய்லாந்து மக்கள் வழிபடும் இந்து கடவுள் அவதாரங்களில் முதன்மையாக இருப்பவர் விநாயகப் பெருமான் என்பதாலும், பாப்பி கணேஷ் என்றால் தாய்லாந்தில் உள்ள சிறு குழந்தைகள் கூட கை கூப்பி வணங்கும் அளவுக்கு அறிமுகமான கடவுளின் திருவுருவம் என்பதாலே, விநாயகர் சதுர்த்தி விழா இங்கு இவ்வளவு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மாநகரின் மையப் பகுதியில், மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் அமைந்துள்ள, இந்த சின்னஞ் சிறிய கோவிலில், சுமார் 25,000 பக்தர்கள் ஒரே நாளில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல், எளிதாக சுவாமி தரிசனம் செய்தார்கள் என்றால், கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளும், முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட நெறிமுறைகளும் மற்றும் பக்தர்கள் நேர்மறை எண்ணங்களுடன் சிரமங்களை புரிந்து கொண்டு சிறப்பாக ஒத்துழைப்பதால் மட்டுமே சாத்தியமாகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எல்லாம் வல்ல இறைவனுடைய அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement