பாக்தாத் : ஈராக் நாட்டின் எர்பில் நகரில் வேளாண்மை மற்றும் பிளாஸ்டிக் தொடர்பான வர்த்தக கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியில் இந்திய அரங்கை இந்திய துணை தூதர் மதன் கோபால் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த 48 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. அந்த நிறுவனங்களின் அரங்குகளை இந்திய துணை தூதர் பார்வையிட்டார். இந்த கண்காட்சி மூலம் இந்திய வர்த்தகர்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது செய்தியாளர் காஹிலா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!