Load Image
Advertisement
dinamalar telegram

நைஜீரியாவில் விநாயகர் சதுர்த்தி

லேகோஸ், நைஜீரியா: மூஷிகவாகனின் முதல் வழிபாடு 15 நாட்களுக்கு முன்னரே துவங்கிவிட்டது. செப்டம்பர் 4, திங்கட்கிழமை - சங்கடஹர சதுர்த்தி முதல் செப்டம்பர் 17 முடிய தினமும் காலை 8 மணி அளவிலும் மாலை 6 மணி அளவிலும் லேகோஸ் ஶ்ரீ விஞ்னேஷ்வருக்கு லட்சார்சனை செய்யப்பட்டு வந்தது. செப்டம்பர் 18 ம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று விடியற்காலையில் 6 மணி அளவில் ஞானத்தை அருள ஞானகாரகனை ப்ரார்தித்து கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

அதனை தொடர்ந்து சுமார் 7 30 மணி அளவில் ஆகம விதிப்படி அனைத்து அபிஷேகம், சத்ரம், சாமரம், கீதம், வாத்தியம் போன்ற ராஜ உபச்சாரங்களுடன் மகேக்ஷ்வர புத்ரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அருகம்புல், மலர்மாலைகளுக்கு இடையே நறுமணம் வீசிபடியே, ஏகதந்தன் அம்சமான அலங்காரத்தில் அருள் பாலித்தார். 9 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கோயில் குழுமம் மோதகம், பாயஸம், சுண்டல் பிரசாதமாக வழங்கியது.

மக்கள் அவரவர் இல்லங்களிலும் கஜாணனனுக்கு வழிபாடு செய்து ஸர்வகார்ய சித்திக்கு வேண்டினர்.

- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement