மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தில் இந்திய தொழிலாளர் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அமித் நாரங் தலைமை வகித்தார். இதில் தொழிலாளர்கள் மற்றும் பணிப்பெண்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு முறையாக சம்பளம் வழங்காதது, ஏஜெண்டுகள் மூலம் அழைத்து வரப்பட்டு முறையான சம்பளம் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தெரிவித்தனர்.
புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தூதரக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!