Load Image
Advertisement
dinamalar telegram

தாய்லாந்து தலைநகர் பாங்காக் கில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்

ஒவ்வொரு மாதமும் சுக்ல சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என விநாயகரைத் வழிபட விழாக்கள் வந்து கொண்டே இருந்தாலும், ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தி விநாயகர் பிறந்த நாளாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. முந்தைய காலங்களில், இல்லங்களிலும், வழிபாட்டுத் தலங்களில் மட்டும் கொண்டாடப்பட்டு வந்த இந்த விழாவை, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பால கங்காதர திலகரால், முதன்முதலாக மகாராஷ்டிர மாநிலத்தில், பொது வெளிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வணங்கி, தேசியம் வளர்வதற்காக, ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஊக்குவித்தார் என்று கூறப்படுகிறது. அவ்வாறாக ஆரம்பித்த இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், இன்று உலகெங்குமுள்ள மக்களால் விமரிசையாக நடத்தப்படுகின்றன.

பாங்காக்கில், விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து சமாஜ், மகா சக்தி மாரியம்மன் ஆலயம், நாக துர்கா ஆலயம், இந்திய மாணவர்கள் அதிகம் படிக்கும் ஏஐடி, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் எஸ்வி சிட்டி, சஞ்சய் குமார் மீடியா உட்பட சுமார் 15 க்கும் மேற்பட்ட அமைப்புகள், இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, வெவ்வேறு நாட்களில் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

இந்தியாவிலும், இந்த ஊர்வலங்கள் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அமைதியான முறையில் நடத்தப் பட்டு வந்தாலும்,ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக, அரசாங்கம் ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இந்த விழாவை நடத்த அனுமதிக்கிறது.

இந்த பாதுகாப்பு அம்சங்களுக்காக செலவழிக்கும் அனைத்தும், நமது வரிப்பணமே என்பதை, அனைவரும் நினைவில் கொண்டு, இந்த இந்து மத விழாவை, மற்ற மதத்தினரும் வந்து வாழ்த்தி, முடிந்தால் சேர்ந்து கொண்டாடும் அளவுக்கு, ஒரு சமூக விழாவாக வருங்காலத்தில் நடத்தினால், அது இந்தியாவின் சகோதரத்துவத்தை உலக அரங்கில், பறைசாற்றும் வகையில் இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான இஸ்லாமிய நண்பர்கள் வழிபடுவதும், நாகூர் தர்காவில் ஏராளமான இந்துக்கள் வழிபடுவதும் சாதாரணமாக நடக்கும் போது, இந்த ஊர்வலமும் அது போல நடக்கும், அனைத்து இடங்களிலும் நடக்க வேண்டும் என்பதே வெளிநாடு வாழ் இந்தியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement