அஜ்மான் : அஜ்மான் இந்திய சங்கத்தில் ஓமன் பண்டிகை கொண்டாட்டம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு சங்க தலைவர் அஹமது சலா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரூப் சித்து வரவேற்புரை நிகழ்த்தினார் சங்க நிர்வாகக் குழுவின் அல்தாப் இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.
இந்திய துணை தூதரக அதிகாரி மணிந்தர் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் அஜ்மான் இந்திய சங்கம் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், ஓணம் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மதிய உணவு வாழை இலையில் ஓண சாதியா எனப்படும் கேரள பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது. அதனையடுத்து கலை, கலாச்சார, பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் இந்திய சமூகத்தினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!