துபாய் : துபாய் அல் முத்தீனா பகுதியில் உள்ள அப்பா பள்ளி எனப்படும் அஹமது பின் சுல்தான் பின் சுலைம் மஸ்ஜிதில் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மீலாது விழா சிறப்பு பயான் நடக்கிறது. தினமும் இரவு 8.45 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு நிகழ்ச்சி துபாய் சக்காஃபத்து சுன்னத் மர்கஸ் ஏற்பாட்டில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் காயல்பட்டனம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியின் நிறுவனர் மௌலவி ஹெச்.ஏ. அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டிவைன் பிளாக் மஜிலிசின் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃஹ்ரூப் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர். மேலதிக விபரங்களுக்கு 055 4255 256 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- நமது செய்தியாளர் காஹிலா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!