Load Image
Advertisement
dinamalar telegram

சிங்கப்பூர் ஆலயத்தில் சுமங்கலி பூஜை கோலாகலம்

கருணை நிறைந்து அகம் புறமும் துளும்பி வழிந்து உயிர்க்கெலாம் களைகனாகித் திகழ்ந்து – தொபாயோ பகுதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் 02.06.2023 – இல் சுமங்கலி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. பெருந் திரளான மங்கல மகளிரும் மழலையரும் பங்கேற்ற சுமங்கலி பூஜை காலை எட்டு மணிக்கு விக்னேஸ்வர பூஜை – புண்யாஹவாசணம் ஆகியவற்றுடன் கோலாகலமாகத் தொடங்கியது.8.30 மணிக்கு துர்க்கை சூக்தம் – வேத பாராயணம் – ஹோமம் முதலியவை தெய்விக மணம் கமழத் தொடர்ந்தது. 9.15 மணிக்கு பக்தப் பெருமக்கள் நேர்த்திக் கடன் செலுத்திய குடம் குடமான பாலாபிஷேகமும் பதினெண் வகை வாசனாதித் திரவியங்களாலான அபிஷேகமும் ஸ்ரீ துர்க்கா தேவிக்கு நடைபெற்றபோது பக்தப் பெருமக்கள் உருக்கத்தோடு ‘ ஓம் சக்தி ...பராசக்தி “ சரண கோஷமெழுப்பியது மெய் சிலிர்க்க வைத்தது.9.45 மணிக்கு யாக சாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித கடம் பக்தர்கள் புடை சூழ ஆலயம் வலம் வரப் பெற்று கலசாபிஷேகம் கண்குளிரக் காட்சி தந்தது. முத்தாய்ப்பு நிகழ்வாக 10.45 மணிக்கு சுமங்கலி பூஜை துவங்கியது. ஏராளமான மங்கல மகளிரும் மழலையரும் பங்கேற்றது சிறப்பம்சமாகத் திகழ்ந்தது. கன்யா பூஜை – குங்கும அர்ச்சனை முதலியவை பக்திப் பிரவாகத்தைப் பெருக்கின. சிவாச்சாரியார்களின் பங்கு இதில் மகத்தானதாகும்.12.15 மணிக்கு மகா தீபாராதனை ஸ்ரீ அன்னையின் அருள்பாலிப்பாய் அமைந்தது. நிறைவாக பங்கேற்ற அனைவருக்கும் அருள் பிரசாதத்துடன் அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement