Load Image
dinamalar telegram
Advertisement

பஹ்ரைன் இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்ப்பு முகாம்

மனாமா : பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு இந்திய தூதர் பியூஷ் ஸ்ரிவாஸ்தவ தலைமை வகித்தார். அப்போது பேசிய தூதர், தொழிலாளர்களின் குறைகளை தீர்க்க உதவும் வகையில் ஒவ்வொரு மாதமும் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். மேலும் தொழிலாளர்களது பிரச்சனைகளை தீர்க்க ஒத்துழைப்பு அளித்து வரும் பஹ்ரைன் அரசின் பல்வேறு துறைகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த முகாமில் 70 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்திய தூதரகத்தின் வழக்கறிஞர் குழுவினர் கலந்து கொண்டு தேவையான சட்ட ஆலோனைகளை வழங்கினர். பல்வேறு இந்திய சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement