குவைத் : குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் தமிழ் பள்ளிவாசலில் புனித ரமழான் முதல் நாள் நோன்பு முதல் சுவைமிக்க தமிழக நோன்பு கஞ்சியுடன் கூடிய நோன்புக் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் நோன்பு கஞ்சி, தண்ணீர், பேரீத்தம் பழம், குளிர்பானம் / மோர், பழம் மற்றும் இரவு உணவு அனைத்தும் நோன்பு திறப்பதற்கு வழங்கப்படுகின்றன.
முதல் நாளில் 200 பெண்கள் மற்றும் 1,500க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். அதனையடுத்து நடந்த தொழுகையில் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்புடன் செய்து வருகின்றனர். இதில் பங்கேற்றவர்கள் தன்னலம் பாராது சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!