தோஹா ( கத்தார் ) : தமிழ் இலக்கியத்துறையில் கவிதை, சிறுகதை, புதினம், சிறுவர் இலக்கியம், மொழிமாற்றுக் கவிதைகள் என பல துறைகளிலும் ஈடுபட்டுவரும் டாக்டர் ஜின்னாஹ் சரிபுத்தீன் ( வயது 70) எனும் பெயரால் அறியப்பட்ட ஓர் இலக்கியவாதியும், தனியார் மருத்துவருமாவார். இலங்கையை சொந்த நாடாக கொண்டவர். தற்போது தனது மகள் மற்றும் குடும்பத்தினரை சந்திக்க கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவுக்கு வந்துள்ளார்.
மஹ்ஜபீன் காவியம், பண்டார வன்னியன் காவியம், திருநபி காவியம்,, தீரன் திப்பு சுல்தான் காவியம் உள்ளிட்ட பல்வேறு காப்பியங்களை படைத்தவர். இதன் மூலம் உலகில் தமிழ் மொழியில் அதிக காப்பியங்களை படைத்துள்ள பெருமைக்குரியவர். இதன் காரணமாக காப்பியக்கோ என அழைக்கப்படுகிறார். மேலும் பல்வேறு கவிதை நூல்களையும் எழுதியுள்ளார்.
இலங்கை தமிழ்ச் சங்கம், இஸ்லாமிய இலக்கியக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்பினை வகித்து வருபவர். கத்தார் நாட்டில் இவரை சந்தித்து பேச விரும்புவோர் +974 3996 3696 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- நமது செய்தியாளர் காஹிலா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!