துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் மதிப்புமிகு முனைவர் பட்டம் பெற்ற முதுவை ஹிதாயத்க்கு பாராட்டு விழா நிகழ்ச்சி 21.03.23 மாலையில் துபாயில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக அபிராமம் ஹசன் இறைவசனங்களை ஓதினார். முன்னாள் தலைவர் மற்றும் கெளரவ ஆலோசகர் அல்ஹாஜ் ஹசன் அஹமது தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளார் இம்தாதுல்லாஹ் தொடக்கவுரையும் பொதுச் செயலாளர் அஸ்லம் வரவேற்புரையும் நிகழ்த்தினர். தலைவர் சுல்த்தான் செய்யது இப்ராஹிம் சிறப்புரையாற்றினார்.
195 நாடுகளின் நேரத்தை குறிப்பிடும் கடிகாரத்தை கண்டுபிடித்ததற்காக அபிராமம் ஹசன் மதிப்பு மிகு முனைவர் பட்டம் வழங்கியது பாராட்டுக்குரியது அபிராமம் ஹசன்க்கு ஜாமாத் நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பலர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து மதிப்புமிகு முனைவர் பட்டம் பெற்ற முதுவை ஹிதாயத்க்கு பொன்னாடை அணிவித்து முதுவை முன்னோடி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர். மதிப்புமிகு முனைவர் பட்டம் பெற்ற முதுவை ஹிதாயத், அபிராமம் ஹசன் உள்ளிட்டோர் ஏற்புரை நிகழ்த்தினர். மற்றும் ஜாமாத்தின் முன்னோடிகளான ஜனாப் நிஜாமுதீன் ஆலிம், மர்ஹும் சம்சுதின் மர்ஹும் முகம்மது அலி உள்ளிட்ட அனைவர் சேவைகளும் நினைவுகூறப்பட்டது. ஜாமாத்தின் கவுரவ ஆலோசகர் ஜாஹாங்கிர் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஹ்ரூப் காக்கா, கீழக்கரை சலீம் காக்கா, மதுக்கூர் ஷாஹுல் ஹமீது ஹாக்கியுள் காதிரி , வாவா முஹம்மது ஹாக்கியுள் காதிரி, திருச்சி ஜலால் பாஹ்மி, மேலும் ஜமாத் நிர்வாகிகள் - உறுப்பினர்கள் அனஸ், அஜிஸ், ரியாஸ், அமின், காஜா, உமர் முக்த்தார் உள்ளிட்ட பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக துஆவுடன் சலவாத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
- நமது செய்தியாளர் காஹிலா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!