Load Image
dinamalar telegram
Advertisement

சிங்கப்பூர் கலாமஞ்சரி – சென்னை தமிழிசை சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு

சிங்கப்பூர் பிரபல தமிழிசைக் களஞ்சியமான தமிழிசைவாணி சௌந்தர நாயகி வைரவனின் கலா மஞ்சரி – சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் முதல்வர் டாக்டர் மீனாட்சி ஆகியோரிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்த கையொப்பமிடல் நிகழ்வு மார்ச் 20 ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய பாசிபிலிட்டி அறையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சிங்கப்பூர் மூத்த தமிழறிஞர் சுப.திண்ணப்பன் தலைமை ஏற்றார். சிங்கப்பூர் வளர் தமிழ் இயக்க மேனாள் தலைவரும் இந்திய மரபுடைமைக் கழகத் தலைவரும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகப் பதிவாளருமான ஆர்.ராஜாராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இசையறிஞர் அரிமளம் பத்மநாபன் வாழ்த்துரை வழங்கினார்..

தமிழிசையின் தொன்மை – வளமை – நன்மைகளைப் பற்றித் தமது தலைமை உரையில் பட்டியலிட்ட பேராசிரியர் சுப.திண்ணப்பன் இந்நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தெனக் குறிப்பிட்டார். தமிழிசையைப் பாடுதல் அருகி வரும் இக்காலத்தில் இத்தகு மீட்டெடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது எனப் புகழ்ந்துரைத்தார். சிறப்பு விருந்தினர் ராஜாராம் உரையாற்றுகையில் கலாமஞ்சரியின் சேவைகளை வெகுவாகப் பாராட்டியதுடன் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்வழி சிங்கையில் தமிழிசையில் நிகர்நிலைப் படிப்புகளுக்கு கலாமஞ்சரி வழிவகுக்கும் என்றார்.

சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் மூலம் தேர்வுகள் நடத்தி மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கிட இயலுமெனவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துவதாகக் குறிப்பிட்டார். இசையறிஞர் அரிமளம் பத்மநாபன் தமது வாழ்த்துரையில் கலாமஞ்சரியின் ஆலோசகராகத் தாம் பங்களிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்ததுடன் இதன் மூலம் வருங்காலத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் உருவாகும் சூழலலைத் தாம் எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டார்.

சௌந்தர நாயகி வைரவன் உரையாற்றுகையில் கலாமஞ்சரி தமிழிசை மூலம் பல நல்ல சமூகப் பணிகளை ஆற்றி வருவதை விவரித்ததோடு தமக்கு உறுதுணையாக உள்ள சமூக அமைப்புகள் – ஆசிரியர்கள் – மாணவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சாட்சிக் கையெழுத்திட்ட திருமுறைமாமணி டாக்டர் கருணாநிதி மற்றும் பிரபல மழலையர் சிறப்பு மருத்துவர் டாக்டர் வெள்ளையப்பன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

இசையாசிரியர் உமா பிரசாத் தமிழிசைப் பாடல் நிகழ்வுக்கு மேலும் சுவையூட்டியது. முன்னதாகத் தமிழிசைப் பயணம் பற்றிய விளக்கப் படக் காணொளி பல அரிய வரலாற்றுப் பதிவுகளைப் பார்வையாளர்களுக்குப் பகிர்ந்தளித்து விருந்து படைத்தது. சென்னைத் தமிழிசைச் சங்க முதல்வர் டாக்டர் மீனாட்சி நன்றி நவில நிகழ்வு நிறைவு கண்டது.

ஒளியொலிக் காட்சிகளை பிரேம்குமார் மற்றும் ஜெயக்குமார் கையாண்டு பாராட்டுப் பெற்றனர். நிகழ்வினை அகிலா முத்து சுவைபட நெறிப்படுத்தினார். தமிழிசை ஆர்வலர்கள் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்

- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement