Load Image
dinamalar telegram
Advertisement

சிட்னிமாநகரில் ஶ்ரீ ராதா கல்யாண உத்ஸவம்

ஆஸ்திரேலியாவின் சிட்னிமாநகரில் ஶ்ரீ ராதா கல்யாண உத்ஸவம் மார்ச் 11, 12 தேதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 2014 ம் ஆண்டு துவங்கப்பட்ட சிட்னி பஜன் மண்டலி என்கின்ற அமைப்பு இந்திய பாரம்பரிய, சம்பிரதாய பஜனை பாடல்களை ஊக்குவித்து வருகிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து கலைமாமணி உடையாளூர் ஶ்ரீ கல்யாணராம பாகவதர் தன்னுடைய குழுவினருடன் வந்து ஶ்ரீ ராதா கல்யாண உத்ஸவத்தை நடத்தி வைத்தார்.

மார்ச் 11 ம் தேதி ஜெயதேவரின் அஷ்டபதி பஜனைகளுடன் ஆரம்பித்த நிகழ்ச்சி, நாம சங்கீர்த்தனம் மற்றும் சம்பிரதாய பஜனை பாடல்களுடன் நிறைவுபெற்றது. மார்ச் 12 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பக்தர்களுக்கு சங்கல்பம் செய்விக்கபட்டு, திவ்யநாம பஜனை, ராதாகல்யாணம், திருமாங்கல்ய தாரணம்,நிறைவாக மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பெண்கள். பூமாலை, புடவை,மற்றும் பழங்கள் போன்ற மங்கல பொருள்களை சீர்வரிசையாக எடுத்து வந்து சமர்ப்பணம் செய்தார்கள்.

எல்லோருக்கும் மஹாபிரசாதம் வழங்கப்பட்டது.சுமார் 600 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட ஶ்ரீ ராதா கல்யாண உற்சவம், அறுசுவை உணவுடன் நிறைவுபெற்றது.

- தினமலர் வாசகர் கே.என்.ஸ்ரீதரன்

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement