Load Image
dinamalar telegram
Advertisement

அல்கோபாரில் சவூதி தமிழ் கலாச்சார மன்ற நிகழ்ச்சி

பொழுதுபோக்கு மட்டுமல்ல பொருளாதார சிந்தனைகளும் தமிழ்ச்சமூகத்திற்கு தேவை என்று கருதி சவூதி தமிழ் கலாச்சார மன்றம் Desire to Reality எனும் யதார்த்தத்திற்கான ஆசை என்கிற நிகழ்ச்சியை MerryLand Event Management Company யின் உதவியுடன் மார்ச் 10ம்தேதி கடந்த வெள்ளிக்கிழமையன்று அல்கோபார் மாநகரில் உள்ள signature hotel யின் கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தாயகத்திலிருந்து தம்மாம் வந்திருந்தார். அவரின் ஆற்றல் மிகு பொருளாதார சிந்தனை பேச்சை கேட்பதற்காக தம்மாம், ஜூபைல், புரைதா, ரியாத், ஜெத்தா போன்ற சவூதியின் பல்வேறு இடங்களிலிருந்தும் அருகில் உள்ள பக்ரைனிலிருந்தும் தமிழ்ச்சமூகம் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

கடந்த 5 வருடத்திற்கு மேலாக இப்படியொரு நிகழ்ச்சி சவூதியின் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவில்லை. இந்த சிறப்பான நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் பயனுள்ளதாக இந்நிகழ்ச்சி அமையப்பெற்றது.

- தினமலர் வாசகர் ரஹ்மத்துல்லா

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement