ரங்கோலிக் கலைக்கான கின்னஸ் உலக சாதனையாளரும் கலை சிகிச்சை நிபுணருமான விஜயலட்சுமி மோகன் தமது சாதனைகள் பற்றிப் பகிர்ந்து கொள்வதற்காக சிங்கப்பூர் என்.பி.எஸ்.சர்வதேசப் பள்ளிக்கு அழைக்கப்பட்டிருந்தார். ரங்கோலி என்பது பொதுவாக இந்தியாவில் திருவிழாக் காலங்களில் அழகூட்டப்படும் ஒரு பாரம்பரிய கலை வடிவம். ரங்கோலி வரையும் போது இரத்த ஓட்டத்தையும் சுவாசத்தையும் சீர்படுத்துகிற உத்தாசனா என்ற யோகா ஆசனமும் செய்யப்படுகிறது. மற்றும் வண்ணங்களைப் பூசி ரங்கோலி வரையும் போது மனமும் மேம்படுகிறது. இவ்வாறு உடல் மற்றும மன ஆரோக்கியத்தை ரங்கோலிக் கலை மேம்படுத்துவதை விஜயலட்சுமி விளக்கினார்.
இவர் தமிழ்நாட்டுக் கோலங்களோடு கேரளாவின் பூக்கோலங்கள் – வட இந்திய ரங்கோலிகள் – துணியில் வரையப்பட்ட பெங்காலி ரங்கோலிகள் – அல்பனா ரங்கோலிகள் போன்ற பலவகை ரங்கோலிகளை வடிவமைத்ததுடன் சிங்கப்பூர் பதிப்புகளையும் உருவாக்கியுள்ளார். இந்த சமகால ரங்கோலிகளை சிங்கோ – ரங்கோலிகள் எனப் பெயரிட்டு கூரைக் கலை – முப்பரிமாணக் கலை முதலிய பல்வேறு வடிவங்களிலும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
ஏழு மணி நேரம் தொடர்ச்சியாக 2756 சதுர அடியில் வரையப்பட்ட இவரது ரங்கோலிக் கலை இலருக்கு உலக சாதனையாளர் விருதைப் பெற்றுத் தந்துள்ளது. 38 ஆவது வயதில் இந்தக் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார். கனவுகாணுங்கள் – ஆனால் கனவு என்பது தூக்கத்தில் இல்ல – உன்னைத் தூங்க விடாமல் செய்வது எதுவோ அது “ என்கிறார் இந்தச் சாதனையாளர். சிங்கப்பூரிலுள்ள மாணவர் மட்டுமல்ல – புலம் பெயர் தொழிலாளர் – அமெரிக்காவிலுள்ள நெப்ராஸ்கோ பல்கலைக் கழக மாணவர் போன்ற பல்வேறு தரப்பினரை இக்கலை மூலம் இவர் ஒன்றிணைக்கிறார்.
தினமலர் வாசகர் ஹேன்னா கேத்தரின் சுரேஷுக்காக
- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!