Load Image
dinamalar telegram
Advertisement

குவைத்தில் இந்திய- இலங்கை தமிழர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்கம் மற்றும் குவைத் சிட்டி கிளினிக் மருத்துவமனையுடன் இணைந்து M.A.ஹைதர் குரூப் மாபெரும் மருத்துவ முகாமை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ சேவை அணி செயலாளர் ஜான் ரமேஷ் தலைமை தாங்கினார். இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியை சங்கத்தின் மண்டல செயலாளர் திருச்சி முபாரக் அலி தொகுத்து வழங்கினார்.

ஊடக செயலர் கும்பகோணம் சரவணன் வரவேற்புரை நிகழ்த்தினார். மண்டல பொருளாளர் மா. இருளப்பன் துணைத்தலைவர் நவ்ஷாத் அலி, துணைச் செயலாளர் தேசம் முத்து நாயகம் முன்னாள் தலைவர் அப்துல் ஹமீத் துணை செயலாளர் பீர் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்

சுமார் 426 க்கும் மேற்பட்ட இந்திய - இலங்கை தமிழர்கள் பயன் பெற்ற இம் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முத்தாய்ப்பாக M.A. ஹைதர் குரூப் கார்கோ டிராவல்ஸ் டாக்டர் ஹைதர் அலி கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.

இந்த சிறப்பு மிகு இலவச மருத்துவ முகாமில் மாநில துணைப் பொதுச் செயலாளர் நூர் முகமது, மாநில தலைமை நிலைய செயலாளர் இதயத்துல்லா, மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை மரைக்காயர், குவைத் தமிழக இயக்க அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக பல சேவகர்களும் கலந்துகொண்டு பாராட்டி பேசினார்.

இந்த நிகழ்ச்சியை குவைத் மண்டலத்தின் தலைவர் அப்துல் மஜீத், ஊடகச் செயலாளர் கும்பகோணம் சரவணன் ஒருங்கிணைக்க,செயற்குழு உறுப்பினர்கள், சந்தாதாரர்கள் கலந்து கொண்டு களமாடினர்

இலவச மருத்துவ முகாமில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ சேவைஅணி குழுவினர் அனைவருக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஊடக செயலாளர் பக்ருதீன் நன்றியுரையுடன் மருத்துவ முகாம் இனிதே முடிவு பெற்றது.

இதில்—இந்தியன் ப்ரண்ட்லைனர்ஸ் சேவை அமைப்பின் கீரணி மதி, குவைத் தமிழ் அமைப்பு சார்பில் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் கலீல் அஹமது பாகவி நாசர், அயலக திமுக சார்பில் சிதம்பரம் தியாகராஜன் மற்றும் ஜலீல் முஸ்தபா, நாம் தமிழர் சார்பில் செந்தில், குவைத் தமிழ் மக்கள் மன்றம் கங்கை கோபால் - அதிமுக சார்பிலும், அக்பர், முத்துராமலிங்கம், ம.ஜ.க சார்பில் நீடூர் நபீஸ், ஹபீப் சாகீர், TMCA விட்டுக்கட்டு மஸ்தான் கலந்துக்கொண்டனர்.

மேலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சக்திவேல், தேமுதிக சார்பில் மாலிக் அன்சாரி, ரபீக் ராஜா,விசிக சார்பில் அன்பரசு மகிழன், தளபதி பேரவை சார்பில் ராஜா முகம்மது ,ஜாகீர் , தந்தை பெரியார் நூலகம் சித்தார்த், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் பாண்டி தென்கொண்டார், ஜி டி.சிங், ரெட்டி நலப் பேரவை நெல்லை சேகர், குவைத் தமிழ் மக்கள் சேவை மையம அப்தாஹிர் மற்றும் நிர்வாகிகள், அறந்தை அறக்கட்டளை நிறுவனர் யூனுஸ் என்ற அறந்தை கணேஷ், குவைத் தமிழ் ஓட்டுனர் சேவை மையம் இமாம் செய்யத் ஜாபர், இனிக்கும் தமிழ் ரபீக் ராஜா, சமூக ஆர்வலர் சவுக்கத் அலி, லைப் ஸ்டைல் சேனல், NPS சேனல், Jaffna சேனல், குவைத் தமிழ் சோசியல் மீடியா போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் செவையாலளர்கள் 22 பேர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அதில் குறிப்பாக MAஹைதர் குரூப் சேர்மன் S.M.ஹைதர் அலிக்கு *வலியோரின் காவலர்* எனும் விருது வழங்கப்பட்டது.

சிட்டி கிளினிக்Ms. Annie valsanக்கு, (CEO City Clinic Group) ‘மனித நேய செம்மல்’ எனும் விருதும், Ibrahim,( General Manager, City Clinic Group) க்கு *மனித நேய சுடர்* எனும் விருதும் , Jonathan Paul ilamaran,( Manager,City Clinic Khaitan ) *மனித நேய மாண்பாளர்* எனும் விருதும் வழங்கப்பட்டது.

குவைத் அதிமுகவிற்கு *அருட்பெருஞ்சோதி வள்ளலார்* விருதும்.Vvtns சங்கத்தின் மருத்துவ சேவை அணி செயலாளர் ஜான் ரமேஷ்க்கு *மக்கள் மேய்ப்பர்* மக்கள் நலன் காப்பவர் எனும் விருதும், குவைத் தமிழ் சோசியல் மீடியாவிற்கு *வளைகுடாவின் சகாப்தம்* எனும் விருதும்,சமூக ஆர்வலர் சவுக்கத் அலிக்கு *உமறுப்புலவர்* எனும் விருதும் வழங்கப்பட்டன.

இவற்றுடன் மருத்துவ களப்பணி செய்த -- Arun Devadoss.D, Suresh Raja Gambeeram, Samson.R, Justin, John Solomon, Amos.A, Vinoth, Sam John..V, Jemila John ramesh , D. John Karthik போன்ற பத்து செவிலியர்களுக்கும் மக்கள் சேவகர் எனும் விருதும் வழங்கப்பட்டது.

மேலும் சிட்டி கிளினிக் சிறப்பு மிகு சேவையை பாராட்டி தமிழகம்- வெளிநாடுகளின் இயங்கும் VVTNS சங்கத்தின் சார்பில் *உயிர் காக்கும் உயர் குடில்* எனும் விருது வழங்கப் பட்டது.

நிகழ்ச்சியை மண்டல தலைவர் அப்துல் மஜீத்,துணை செயலாளர் முத்து நாயகம் , ஊடகம் சரவணன், துணை தலைவர் நவ்சாத், சித்திரை செல்வன், அப்துல்லாஹ், சமூக ஆர்வலர் ரசாரியோ இப்ராஹிம்ஷா , ஜெயகுமார், மர்சூக், உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர் .கூட்டத்தில் ஊடக செயலாளர் பக்ருதீன் நன்றியுரை நிகழ்த்தினர்.

-குவைத்திலிருந்து இதயத்துல்லா

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement