Load Image
dinamalar telegram
Advertisement

நைஜீரியாவில் தியாகராஜ ஆராதனை

லேகோஸ், நைஜீரியா: லேகோஸ் அபாப்பாவில் உள்ள சாய் மந்திரில் ஶ்ரீ தியாகராஜ ஆராதனை நடந்தது. காலை 10 மணி அளவில் தொடங்கிய இவ்வைபவம் 12 மணி அளவில் ஆரத்தியுடன் நிறைவடைந்தது. கர்நாடக இசை பயிற்சியாளர்களும், முப்பதுக்கும் மேற்பட்ட கர்நாடக இசை பயிலும் மாணவர்களும், பெண்களும் பங்கு கொண்டனர்.இதில் பஞ்சரத்ன கீர்த்தனைகள், தியாகராஜ கீர்த்தனைகள், திவ்ய நாம கீர்த்தனைகள், உத்சவ சம்ப்ரதாய கீர்த்தனைகள் பாடப்பட்டன. இதில் கலந்துகொண்ட இசை பிரியர்களுக்கு திருவையாறு உற்சவத்தில் கலந்து கொண்டது போன்ற பிரமிப்பு ஏற்பட்டது. விழாவை சிறப்பாக 17வது ஆண்டாக நடத்திய ஹேமா ரவி மற்றும் ரவிசங்கர் ஆகியோருக்கு இசை கலைஞர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement