புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஆஸ்திரேலியா அடிலெய்டு நகரில் பொங்கல் விழா அடிலெய்டு தமிழ் சங்கத்தால் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், மக்கள் பொங்கல் வைத்து இயற்கைக்கு நன்றி செலுத்தினர். இந்த பொங்கல் விழாவில் பல்வேறு இசை, கலை நிகழ்ச்சிகள் மட்டுமன்றி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான கபடி, பானை உடைத்தல் , கயிறு இழுத்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன .
இந்த விழாவில் தமிழர்களின் மரபு இசைக்கருவிகள் காட்சிக்கு வைக்க பட்டது. தெற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த தமிழ் மக்கள் மட்டுமன்றி ஆஸ்திரேலியர்களும் இந்த விழாவை கண்டு களித்தனர்.
- தினமலர் வாசகர் கண்ணன் ராமகிருஷ்ணன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!