துபாய்: துபாய் டிவைன் பிளாக் மஜ்லிஸ் சார்பில் கோயம்புத்தூர் கரும்புக்கடை பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலவி அப்துல் அஜீஸ் பாகவிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் ‘மஸ்னவி ஷரீஃப்’ நூலை அன்பளிப்பாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து மௌலவி அப்துல் அஜீஸ் பாகவி மஜ்லிசின் சிறப்புக்கள் குறித்து உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் ஜலால், இம்தாதுல்லா, ராஜா முஹம்மது, முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!