Load Image
dinamalar telegram
Advertisement

துபாயில் ரத்ததான முகாம்

துபாய் : இந்தியர் நலவாழ்வு பேரவை துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் அல் பரஹா மருத்துமனையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது..இந்த முகாம் இந்தியாவின் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டது. இந்த முகாமுக்கு இந்தியர் நலவாழ்வு பேரவையின் அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி தலைமையும், அமீரக துணைத்தலைவர் ஏ.எஸ். இப்ராஹிம், அமீரக பொருளாளர் டாக்டர் அப்துல் காதர் துணைச் செயலாளர் பொறியாளர் முகம்மது கஜ்ஜாலி, துபாய் மண்டல தலைவர் உமர் ஃபாரூக் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஹசிமைட் குழுமத்தின் நிர்வாக மேலாளர் வெங்கடேஷன். புவேனேஷ்வரி, தொழில் அதிபர் இளையான்குடி அபுதாஹிர், டீபா அமைப்பின் தலைவர் பால் பிரபாகரன் , அல் அய்ன் இந்தியன் சமூக தலைவர் முபாரக் முஸ்தபா கலந்து கொண்டனர். நிகழ்வில் மண்டல செயலாளர் கீழக்கரை ஜைனுல் ஆபிதீன், மண்டல துணை தலைவர் முஹம்மது பாரூக் ,மமக செயலாளர் அடியற்கை சேக் தாவூத், மண்டல துணை செயலாளர் மதுக்கூர் பைசல், மண்டல மருத்துவ அணி செயலாளர் மன்னை அமீன் லால்பேட்டை யாசர் அரபாத் திருப்பூர் கலீல் ஷார்ஜா மண்டல தலைவர் சலீம் ரப்பாணி அல் அய்ன் மண்டல நிர்வாகி பாம்பன் ஐலால், கடலூர் யாசின், அன்சாரி, சென்னை பிலால் கலந்து கொண்டார்கள்.

இந்த முகாமில் நூற்றுக்கு மேற்ப்பட்டோர் இரத்த தானம் செய்தார்கள். துபாய் மண்டலம் சார்பாக இரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் காஹிலா

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement