சார்லட், வட கரோலினா, அமெரிக்கா: தாய்த் தமிழை தம் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கவும், புலம்பெயர் நாட்டில் தமிழ் மொழி வாசிப்பை வளர்க்கவும் சார்லட் தமிழ்ச் சங்கம் தன்னார்வலர்கள் உதவியுடன் தமிழ் நூல்களை தமிழ்நாட்டிலிருந்து தருவித்து, அமெரிக்கப் பொது நூலகங்களுக்குக் கொடையளித்துள்ளனர். இதன் வழியாக சார்லட்டில் வசிக்கும் எவரும் தமிழ் நூல்களை நூலகங்களின் வழியே பெற்று வாசித்துப் பயன்பெறலாம். இந்த முயற்சிக்கு ஊக்கமளித்து நூல்களை வரவேற்றுப் பெற்ற சார்லெட் நூலகக் குழுவினருக்கு தமிழ்சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். - சார்லட் நகரிலிருந்து தினமலர் வாசகர் திருச்செந்தில். எஸ்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!