Load Image
dinamalar telegram
Advertisement

அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் அலுமினிய கேன்கள் சேகரிப்பு

துபாய் : துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் அலுமினிய கேன்கள் சேகரிக்கப்பட்டது. இந் த அலுமினிய கேன்கள் “ Cancel the Linear, Enable the Circular”, என்ற கருப்பொருளில் சேகரிக்கப்பட்டது.இது குறித்து அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவி ஹபிபா அல் மராசி கூறியதாவது ஒவ்வொரு ஆண்டும் சேகரிக்கப்படும் இந்த அலுமினிய கேன்கள் பணிக்கு பள்ளிக்கூட மாணவ, மாணவியர், கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் இந்த பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த ஆண்டு 11,987 kg அலுமினிய கேன்கள் சேகரிக்கப்பட்டது. இந்த அலுமினிய கேன்கள் அனைத்தும் மறுசுழற்சி பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.- நமது செய்தியாளர் காஹிலா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement