Load Image
dinamalar telegram
Advertisement

தாவோ மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தென் கிழக்கு ஆசியா நாடான பிலிப்பைன்ஸ் நாட்டின் தாவோ நகரில் உள்ள தாவோ மருத்துவக் கல்லூரியில் பயின்ற 2019 ஆம் ஆண்டில் இணைந்த மாணவர்கள் 275 பேர்கள் மருத்துவப் பட்டப் படிப்பை முடித்து சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடந்தது. தாவோ மருத்துவக் கல்லூரியின் தலைவர் வழக்கறிஞர் ஆண்டனி ஆல்பிரோட்ட தலைமையில் கல்லூரி முதல்வர் டாக்டர் எர்வின் ஆண்டிவோரஸ் மற்றும் கல்லூரியின் பங்குதாரர்களிள் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த மனிதநேயர் டாக்டர் டேவிட் கே பிள்ளை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி செவாலியர் வி ஜி சந்தோஷம் மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் மதிமுக துணை பொதுச் செயலாளருமான மல்லை சி ஏ சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர் . இவ்விழாவில் வி ஜி சந்தோஷம் மல்லை சத்யா ஆகியோர்க்கு சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தாவோ மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளுக்கு விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து திருவள்ளுவர் சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது

மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் 275 இருபால் இந்திய மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 150 மாணவர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் இவர்களில் பெரும்பாலோர் கிராமப் புற ஏழை மாணவர்கள் மருத்துவர்களாகி சாதித்து இருக்கின்றார்கள்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement