Load Image
dinamalar telegram
Advertisement

துபாயில் அரபியரை கவர்ந்த தமிழக மாற்றுத்திறனாளிகள்

துபாய்: துபாய் உலக வர்த்தக மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன வசதிகள் தொடர்பான கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றன. குறிப்பாக தமிழகத்தின் சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்தும், அக்குபஞ்சர் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் இடம் பெற்றன.முதலுலக மூத்தகுடி அமைப்பின் நிறுவனர் டாக்டர் சி.கே. அசோக் குமார் ஏற்பாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த பார்வையற்ற இளைஞர்கள் பார்வையாளர்களுக்கு கை, கால் உள்ளிட்ட பாகங்களை மசாஜ் மற்றும் அக்குபிரஷர் முறையில் சேவை செய்தனர். இந்த முறையை அனுபவித்த அரபியர்கள் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறை பயனுள்ளதாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்தனர். இத்தகைய மாற்று மருத்துவ முறை தங்களது உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறது. இதனை தங்களது நாடுகளிலும் பயன்படுத்த தேவையான முயற்சிகள் செய்யப்படும் என்றனர்.தமிழகம் உள்ளிட்ட இந்திய மாற்றுத்திறனாளிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளூம் இடம் பெற்றது.- நமது செய்தியாளர் காஹிலா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement