Load Image
dinamalar telegram
Advertisement

இலண்டனில் நவராத்திரி கொலு

பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரமானது, நம் நாட்டில் மட்டுமின்றி அயல் நாடுகளிலும் மிக சிறந்த முறையில் கடைபிடிக்கப்படுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த ஆண்டு 26.09.2022 முதல் 04.10.2022 வரை இங்கிலாந்து இலண்டனில் நடைபெற்ற நவராத்திரி கொலு நிகழ்சியினைக் குறிப்பிடலாம்.

தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம், மகாராஷ்ரா, இராஜஸ்தான், காஷ்மீர், குஜராத் போன்ற இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் மலேசியா, இலங்கை தைவான் போன்ற நாடுகளில் இருந்தும் புலம் பெயர்ந்து இலண்டனில் குடியேற்றம் அடைந்த மக்கள் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடன் இருப்பதுடன், நாம் இந்தியாவில் கொண்டாடப்படுகின்ற அனைத்து பண்டிகைகளிலும் தாங்களே முன்னின்று கொண்டாடுவது மிகவும் வியப்பாக உள்ளது.

நாங்கள் இலண்டனில் கோல்ட்ஸ்டான், சட்டன், ரெயின்ஹாம், ஒர்ஸ்டர் பார்க், அயில்ஸ்பெரி, போன்ற இடங்களில் உள்ள நண்பர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட நவராத்திரி கொலுவிற்கு வெவ்வேறு தினங்கள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு வீட்டிலும் நடைபெற்ற பஜனைகள் மிக சிறப்பாக அமைந்தன. சின்மியா மிஷனில் பாலவிகாரில் பயின்ற இளம் குழந்தைகள் இங்கு தெய்வீகப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர். பெண் குழந்தைகள் பரத நாட்டியம் ஆடி வந்திருந்த பக்தர்கள் அனைவரையும் பரவசப்படுத்தினர். பள்ளி மாணவர்கள், விஷ்வா ஸ்ரீராம், சித்தார்த், அனிரூத் அருள்மிகு தெய்வங்கள் வினாயகர், முருகன், கிருஷ்ணர், சிவன், அம்பாள் சம்பந்தப்பட்ட பாடல்களைப் பாடியது மெய்சிலிர்க்க வைத்தது. அபிநயா மற்றும் ஆர்த்தியின் பரத நாட்டியம், மக்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்தன.

பவித்திரா ஐம்பூதங்கள் பற்றி எடுத்துக் கூறும் போது நீரினால் கிடைக்கப் பெறும் புனிதத்துவம் பற்றி விஞ்ஞான பூர்வமாக எடுத்துக் கூறிய பாங்கினை நோக்கும்போது அஞ்ஞானிகளும் தெளிவு பெறுவார்கள் என்பது உறுதி. நீரினை தனித்தனி பாத்திரங்களில் வைக்க வேண்டும். சில பாத்திரங்களை உற்று நோக்கி நல்ல வார்த்தைகளை கூறியும், மற்ற சில பாத்திரங்களை உற்று நோக்கி தேவையற்ற வார்த்தைகளை கூறி வைக்க வேண்டும். பின் அந்த நீரினை பாத்திரத்துடன் ஒரு கண்ணாடியில் தனித்தனியாக 0 டிகிரிக்கும் கீழ் உறைய வைக்க வேண்டும். அவை கிரிஸ்டலாக (படிகங்கள்) மாறுவதைக் காணலாம்.

அந்த படிகங்களை உற்று நோக்கினால், நல்ல வார்த்தைகளால் ஈர்க்கப்பட்ட நீரின் படிகங்களும், கெட்ட வார்த்தைகளால் ஈர்க்கப்பட்ட நீரின் படிகங்களும் வெவ்வேறு ரூபத்தில் இருப்பதை காணலாம். இந்த சோதனையை கணிபொறியின் மூலம் எடுத்துக் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மேலும் கலசத்தில் வைக்கப்பட்ட நீரில் புனித தன்மை உள்ளதாகவும், அந்த தீர்த்த நீரினை வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளித்து, அதன் பின் அனைவரது தலைகளில் தெளிப்பது மூலம் புத்துணர்ச்சி கிடைப்பதாகவும் அவர் எடுத்துக் கூறினார். இவ்வாறு குழந்தைகள் அனைவருக்கும் நீரின் (தீர்த்தம்) தெய்வீகத் தன்மையை எளிமையாக விளக்கிக் கூறியது மிகவும் பாராட்டுக்குறிய செயலாக அமைந்தது.

ச.பொன்ராஜ், மனிதர்களின் குணாதிசையங்களை ஆறு வித வர்ணங்களில் சுட்டிக் காட்டி கவியாக பாடி மக்களை மகிழ்வித்தார். இறுதியில் ஆர்த்தி காட்டப்பட்டது. விழா நடத்தியவர்கள் சுவையான விருந்தினையும் கொடுத்து பக்தர்களை மகிழ்வித்தனர்.

- இலண்டனிலிருந்து தினமலர் வாசகர் ச.பொன்ராஜ்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement