என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் சாரதா நவராத்திரி விழா செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சகல சௌபாக்கியங்களையும் ஐஸ்வர்யங்களையும் வழங்கும் அன்னை மூகாம்பிகை எழுந்தருளி அருள்பாலித்து வரும் இவ்வாலயத்தில் அன்னை மாரியம்மன் அலங்காரத்திலும் – ஊஞ்சல் சேவையிலும் – ஸ்ரீ மீனாட்சி திருக் கோலத்திலும் கொலு மண்டபத்தில் எழுந்தருளிக் காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார்.
ஆலய நாட்டிய மணிகளும் கணேசன் தர்ஷன் பைன் ஆர்ட்ஸ் குழுவினரும் தங்கள் அற்புதமான கலை நிகழ்ச்சிகளால் பக்தப் பெருமக்களை அசத்தினர். தலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் ஸ்ரீ தேவி மகாத்மிய மகிமை பற்றி நாள்தோறும் விளக்குவது பக்தப் பெருமக்களுக்கு நல்விருந்தாக அமைந்து வருகிறது. ஆலய மேலாண்மைக்குழுத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையிலான உறுப்பினர்கள் மற்றும் தொண்டூழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வால் ஆலயம் தெய்விக மணம் கமழ்கிறது .சொல் விருந்தும் பிரசாத நல்விருந்தும் பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
- நமது சிங்கப்பூர் செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!