Load Image
dinamalar telegram
Advertisement

தொண்டு உள்ளத்தில், இலண்டனில் நீண்ட தூர நடைபயணம்

புரோஸ்டேட் புற்று நோயானது ஒரு ஆண் புற்று நோய் என்று இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயின் ஆராய்ச்சி சம்பந்தபட்ட நிதிகளுக்கு பொது மக்களிடம் இருந்து நிதிகள் திரட்டுவதற்கு இங்கிலாந்து கேன்சர் ஆராய்ச்சி என்ற அமைப்பு மரத்தான் என்று கூறப்படுகின்ற இரவு நேர நடைபயணத்திற்கு உரிய நடைவடிக்கை எடுத்தது, இதன் பயனாய் 24.09.2022 அன்று தொண்டு உள்ளம் படைத்தோர்கள் திரண்டிருந்தனர். இணையதளத்தின் மூலம்; நிதிகள் வசூலிப்பதற்கும், அனுமதி சீட்டு பெறுவதற்கும் இந்த அமைப்பு ஏற்பாடுகள் செய்திருந்தது.

24.09.2022 அன்று இரவு 07.30 மற்றும் 09.30 மணியளவில் இரண்டு அணிகளாக இந்த நடைபயணம் இலண்டன் சௌத்வாக் பூங்காவில் இருந்து புறப்;பட்டன. நடைபயணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரத்தியோக ஆடை அணிந்த வண்ணம், அணி திரண்டு வந்து பங்கேற்றேனர். நல்லதொரு திட்டத்திற்கு மக்களின் விழிப்புணர்வு எந்த அளவுக்கு இருந்தது என்பதனை கண்கூடாகக் காண முடிந்தது.

இந்த நடைபயணம் ஜமாய்கா சாலை, தேம்ஸ் நதி, டவர் ஆப் இலண்டன், மகாராணி விக்டோரியா தெரு, வெஸ்ட்மினிஸ்டர், வாட்டர்லூ, இலண்டன் ஐ, இலண்டன் டவர் பிரிட்ஜ், ஓல்டு பில்லிங்கேட் வரையும் 24 கி.மீ தூரம் நடைபெற்றன.

புத்துணர்ச்சி தரும் பொருட்டு ஆங்காங்கே திண்பண்டங்கள், தண்ணீர் முதலியன கிடைப்பதற்கு வழிவகைகள் செய்யப்பட்டு இருந்தன. ஆலோசனைகளும், நடைபயணத்தில் மக்களுக்கு உதவி கரங்கள் நீட்டுவதற்கு ஆங்காங்கே சமுக சேவை தொண்டர்களும் இருந்தனர். தகுந்த பாதுகாப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டன. தொலைதூரத்தில் இருந்து வருபவர்களின் போக்குவரத்து வசதியினை முன்னிட்டு, தேவையான போக்குவரத்துகளும் இரவு நேரத்தில் செயல்பட்டன.

தகுந்த முறைப்படியான நிலைப்பாட்டில் செயல்பட்ட இந்த நிதிதிரட்டல், தைரியமான யோசனைகளைக் கொண்ட புதுமை ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கம் தருவதுடன், எதிர்காலத்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்படும் நோயளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்த நடைபயணத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும்,இந்த அமைப்பிற்கும் நன்றி கடன் செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

- தினமலர் வாசகர் ச.பொன்ராஜ்,

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement