Load Image
dinamalar telegram
Advertisement

துபாயில் 'வாழ்வது ஒரு கலை' நூல் அறிமுக நிகழ்ச்சி

துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் 'வாழ்வது ஒரு கலை' நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிறந்தவர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீம். 1950 கால கட்டத்தில் தமிழ் மொழியில் தன்னம்பிக்கை தொடர்பான நூல்களை அதிகம் எழுதியவர். அத்தகைய சிறப்புமிகு எழுத்தாளரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதனால் அவர் எழுதிய நூல்கள் அமீரகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் பரவலாக இளம் தலைமுறையினர் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

துபாயில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழக புரவலர் முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஃரூப் அவர்கள் எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் எழுதிய 'வாழ்வது ஒரு கலை' எழுதிய நூலை வெளியிட புரவலர் சலீம் காக்கா பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழக அமீரக பிரதிநிதி முதுவை ஹிதாயத், பஹீமியா டிரஸ்டின் ஜலால் ஃபைஜி, காயல் பாக்கர், மார்க்க அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement