Load Image
dinamalar telegram
Advertisement

ஸ்விட்ஸர்லாந்தில் மகரிஷி பரஞ்ஜோதியார்

ஐரோப்பாவில் ஆன்மிக யாத்திரை மேற்கொண்டு வரும் திருமூர்த்திமலை உலக சமாதன அறக்கட்டளை நிறுவநர் ஞானபீடாதிபதி ஜெகத்குரு மகா மகரிஷி குருமஹான் பரஞ்ஜோதியார் ஸ்விட்ஸர்லாந்து வந்தடைந்தபோது மிகச் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற சத்சங்கத்தில் வெளிநாட்டவரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். ஒரு நிமிட அமைதியோடு நிகழ்வு தொடங்கியது. குரு கீதம் – ஞான கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றது. மகா சக்தி யோகம் – சர்வ சக்தி மகா யக்ஞம் – அகதவப் பயிற்சிகள் – ஆழ்நிலைத் தியானம் முதலியன நடைபெறவிருக்கின்றன. “ இவற்றின் முக்கியத்துவம் பற்றி மகரிஷி விளக்கினார்.

அமைதி காப்பேன் – குடும்ப அமைதி காப்பேன் – தேச அமைதி காப்பேன் – உலக அமைதி காப்பேன் “ எனப் பங்கேற்றோர் பிரதிக்கினை எடுத்துக் கொண்டனர். “ வளர்க மெய்ஞானம் – வாழ்க சமாதானம் – உலக நலம் காப்போம் – உலக அமைதி காப்போம் – அன்னை பூமி நீடூழி வாழ்க – பிரபஞ்சம் நீடூழி வாழ்க – சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும்நிறை சத்திய யுகம் மலருக “ என அனைவரும் இணைந்து முழங்க நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

பங்கேற்றோர் குறிப்பாக வெளிநாட்டவர் உருக்கத்தோடு சற்குருவே சரணம் என முழங்கியது மெய்சிலிர்க்க வைத்தது.

- தினமலர் வாசகர் தமிழ்க்கோ

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement